டிவிஎஸ் அகுலா 310 எப்பொழுது

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் அகுலா 310 ஃபேரிங் பைக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 2016 வருடத்தின் இறுதியில் அகுலா 310 பைக் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

TVS-Akula-310-concept

முழுதும் கார்பன் ஃபைபர் பாடியால் வடிவமைக்கப்பட அகுலா 310 மாடலில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள 34 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 28Nm ஆகும்.

முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள அகுலா 310 மாடல் பிஎம்டபிள்யூ -டிவிஎஸ் கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள இந்த மாடல் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. கேடிஎம் ஆர்சி390 , யமஹா ஆர்3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 போன்ற பைக்குகளுடன் போட்டியிடும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

130 கிலோ எடை கொண்ட மாடலாக விளங்க போகும் டிவிஎஸ் அகுலா 310 பைக்கில் முன்பக்கத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ரேஸ் சஸ்பென்ஷன் , ரேடியல் காலிப்பர் , ஹை ஸ்டீஃப் ஸ்பேஸ் ஃபிரேம் சேஸீ , டிஜிட்டல் கன்சோல் , ஹீட் மேனேஜ்மென்ட் அமைப்பு , ஆன் போர்டு gyro கேமரா , ஸ்டீயரிங் டேம்பர் போன்றவற்றை பெற்றிருக்கும்.

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....