டோமினார் 400 பைக் பற்றி தெரிய வேண்டிய முக்கிய விபரங்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் அதிக திறன் வாய்ந்த மாடலாக வரவுள்ள பஜாஜ் டோமினார் 400 க்ரூஸர் பைக் டிசம்பர் 15 ,2016 அன்று விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சில முக்கிய விபரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

bajaj-pulsar-cs400-1

 

1. பல்சர் சிஎஸ்400

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முறையாக பஜாஜ் பல்சர் சிஎஸ்400 (Cruiser Sport 400 – CS 400) என்ற பெயரில் க்ரூஸர் ஸ்போர்ட்டிவ் மாடல் காட்சிக்கு வந்தது.

2. புதிய பிராண்டு பெயர்

பல்சர் அணிவரிசையில் 135சிசி முதல் 200சிசி வரையிலான எஞ்ஜின் தேர்வுகளில் கிடைத்து வருகின்ற நிலையில் 400சிசி எஞ்ஜின் இடம்பெற உள்ள இந்த பைக்கிற்கு புதிய பிராண்டு பெயரை வைக்க பஜாஜ் ஆட்டோ முடிவு செய்திருந்த நிலையில் முதலில் பல்சர் விஎஸ்400 அதன்பிறகு க்ராடோஸ் விஎஸ்400 (Vantage Sport 400 – VS 400) என கூறுப்பட்ட நிலையில் தற்பொழுது இறுதியாக டோமினார் 400 என விற்பனைக்கு வரவுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

bajaj-pulsar-vs400-spy-side

3. வடிவம்

மிக நேர்த்தியான வடிவத்தை பெற்ற கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ள உற்பத்தி நிலையின் வடிவமும் சிஎஸ்400 பைக்கினை முழுமையாக சார்ந்துள்ளது.

4. டொமினார் 400 எஞ்ஜின்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அங்கமான ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் ஆற்றலை குறைத்து  34.51 hp (25.74 KW) பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். விஎஸ்400 பைக்கின் எடை 332 கிலோகிராம் ஆகும். டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 160 கிமீ ஆக இருக்கலாம்.

bajaj-pulsar-cs400-meter

5. சிறப்பு வசதிகள்

பல்வேறு வசதிகளை கொண்ட மாடலாக வரவுள்ள இந்த பைக்கில் குறிப்பாக முழு எல்இடி ஹெட்லேம்ப் , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் என பல வசதிகளை பெற்றதாக இருக்கும்.

ஏபிஎஸ் பிரேக் அம்சமானது ட்யூவல்சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக கிடைக்கலாம். மேலும் ஏபிஎஸ் இல்லாத மாடலும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

6.  வருகை

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட டோமினார் 400 பைக்கின் உற்பத்தி கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டுள்ளதால் வருகின்ற டிசம்பர் 15ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

bajaj-dominar-vs400-production-begins

7. விலை

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் மிக சவாலாக பஜாஜ டோமினார் 400 பைக் விலை ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.80 லட்சத்துக்குள் அமையலாம்.

8. போட்டியாளர்கள்

பஜாஜ் டோமினார் பைக்கிற்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றாலும் மஹிந்திரா மோஜோ ,ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்  பைக்குகளுடன் சந்தையில் போட்டியிடும்.

 

பகிர்க :

Reply

புதிய வடிவமைப்பில் பிரச்சனை என்றால் தொடர்புகொள்ளContact Us
+ +