பஜாஜ் க்ராடோஸ் விஎஸ்400 க்ரூஸர் பைக் விரைவில் – Bajaj Kratos VS400

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய விஎஸ்400 பைக்கினை  பஜாஜ் க்ராடோஸ் (Bajaj Kratos VS400) என்கின்ற புதிய பிராண்டின் பெயரில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

bajaj-pulsar-vs400-spy-side

பல்சர் சிஎஸ்400 என ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தபட்ட க்ரூஸர் ரக ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் விஎஸ்400 என உறுதியாகி நிலையில் பல்சர் பிராண்டு அல்லாத புதிய பிராண்டினை விஎஸ்400 பைக்கிற்கு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் உறுதி செய்யப்படாத நம்பகமான தகவலாக பஜாஜ் நிறுவனத்தின் புதிய பிராண்டாக க்ராடோஸ் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

க்ராடோஸ் (Kratos)  என்றால் கிரேக்க மொழியில் கடவுளின் சக்தி எனபது பொருளாகும். புதிய பிராண்டில் முதல் மாடலாக VS400 பைக் இடம்பெற உள்ளது. VS என்றால்  க்ராடோஸ் விஎஸ்400 பைக்கில் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம் பெற்றுள்ள அதே இன்ஜினை ட்யூன் செய்து 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். விஎஸ்400 பைக்கின் எடை 332 கிலோகிராம் ஆகும்.

எல்இடி ஹெட்லேம்ப் , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்பிக்கத்தில் னோனோஷாக் அப்சார்பரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ட்யூவல் சேனல் ஏபிஎஸ் என பல வசதிகளை பெற்றுள்ளது.

ரூ. 2 லட்சம் விலையில் பஜாஜ் க்ராடோஸ் விஎஸ்400 க்ரூஸர் பைக் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வரவுள்ளது.

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....