புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வருகை விபரம் – புதிய கார்கள் 2017

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய கிராண்ட் ஐ10 காரின் தோற்றம் மற்றும் இன்டிரியரில் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலாக விளங்கும்.

2017-hyundai-i10-facelift-official-images-front

இந்தியாவில் 2014 ஆம்ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் கார் இளம் தலைமுறையினர் விரும்பும் டிசைன் அம்சங்களுடன் அமைந்து சிறப்பான வரவேற்பினை பெற்று போட்டியாளரான மாருதி ஸ்விஃப்ட் ,ஃபிகோ போன்ற கார்களுடன் சந்தையை பகிர்ந்துகொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கிராண்ட் ஐ10 கார் முதன்முறையாக சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற பாரீஸ் மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐரோப்பியா வடிவ தாத்பரியங்களை கொண்ட இதே மாடலின் அடிப்பையிலே சில தோற்ற மாற்றங்களை பெற்றதாக இந்தியாவில் வரவுள்ளது. முந்தைய மாடலின் தோற்றத்தில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கிரில் அமைப்பு , ஹெட்லேம்ப் உடன் இணைந்த பகல் நேர ரன்னிங் விளக்கு போன்றவற்றை பெற்றிருக்கும்.

இன்டிரியர் அமைப்பின் தோற்றம் மேம்படுத்தப்பட்டு , நவீன வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும். குறிப்பாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , புதிய அப்ஹோல்ஸ்ட்ரி , லைட் இல்மினேஷன் போன்றவற்றை கொண்டிருக்கும்.

விற்பனையில் உள்ள மாடலில் இடம்பெற்றிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். கூடுதலாக பெட்ரோல் மாடலில் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விற்பனைக்கு வரவுள்ள காரின் விலை ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் விலையில் அமையலாம்.

பகிர்க :

Reply

புதிய வடிவமைப்பில் பிரச்சனை என்றால் தொடர்புகொள்ளContact Us
+ +