மிட்சுபிஷி மான்ட்டிரியோ எஸ்யூவி இந்தியா வருகை

மிட்சுபிஷி நிறுவனம் இந்தியாவில் பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி காரை மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில் மீண்டும் மிட்சுபிஷி மான்ட்டிரியோ எஸ்யூவி காரை ரூ.70 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் செப்டம்பர் மாத மத்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Mitsubishi-Montero

இந்தியாவில் மான்ட்டிரியோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்யூவி கார் ஒரு சில நாடுகளில் பஜெரோ அல்லது ஷோகன் என்ற பெயரிலும் விற்பை செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது டீலர்கள் வாயிலாக மான்ட்டிரியோ எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.10 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கும் அக்டோபர் முதல் டெலிவரி தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மான்டிரியோ நுட்ப விபரங்கள்

முன்பக்க தோற்றம் கிளாசிக் மாடல் எஸ்யூவி கார்களை போன்று அமைந்து உறுதியான கட்டமைப்பினை கொண்டுள்ளது. புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் பெற்று கம்பீரமாக காட்சியளிக்கின்றது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , மேற்கூரை ரயில்கள் போன்றவற்றுடன் பின்புறத்தில் ஸ்பேர் வீல் டயரை பின்கதவுகளில் பெற்று விளங்குகின்றது.

உட்புறத்தில் 7 இருக்கைகளுடன் மிக தாரளமான இடவசதியை பெற்றுள்ள மான்டிரியோ காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்டீயரிங் வீல் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் , க்ரூஸ் கன்ட்ரோல் ,  பிரிமியம் லெதர் இருக்கைகள் , சூரிய மேற்கூறை போன்றவற்றை பெற்றிருக்கும்.

மான்ட்டிரியோ எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டுள்ள 3.2 லிட்டர் என்ஜின் 189bhp ஆற்றல் மற்றும் 441Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதன் ஆற்றல் 4 வீல்களுக்கு கடத்துவதற்கு 5 வேக ஆட்டோ கியர்பாக்சினை பெற்றுள்ளது.

இரு ஸ்டேஜ் கொண்ட 6 முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்ற அம்சங்களை பெற்றிருக்கும்.  வார்ம் வெள்ளை  மைகா , வெள்ளை சாலிட் ,  பிளாக் மைகா , கிரே மெட்டாலிக் , சில்வர் மெட்டாலிக் , பிளாட்டினம் பீஜ் மெட்டாலிக் மற்றும் பிரவுன் மெட்டாலிக் என மொத்தம் 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும். மிட்சுபிஷி மான்ட்டிரியோ எஸ்யூவி விலை ரூ. 70 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....