மெர்சிடிஸ் G 63 ஏஎம்ஜி கிரேசி கலர் பதிப்பு விற்பனைக்கு வந்தது

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யுவி காரின் கிசேசி கலர் பதிப்பு இந்தியாவில் ரூ.2.17 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் G 63 AMG  பிரபலமான உலக எஸ்யூவி காராகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யுவி
கடந்த 35 வருடங்களாக உற்பத்தியில் உள்ள மிக பிரபலமான மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யுவி காரின் 36 வருட கொண்டாடத்தை ஒட்டி 3 புதிய வண்ணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரில் இணைக்கப்பட்டுள்ள வண்ணங்கள் சன்செட் பீம் (ஆரஞ்சு) , சோலார் பீம் (மஞ்சள்) மற்றும் ஏலியன் பச்சை ஆகும். இந்த வண்ணங்கள் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது.
544 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 760என்எம் ஆகும் 7 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 5.4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 210கிமீ ஆக எலக்ட்ரானிக் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் விலை ரூ.2.17 கோடி (ex-showroom Delhi)
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யுவி
Mercedes G63 AMG Crazy Colour Edition Launched in India

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....