ஹூண்டாய் எலைட் ஐ20 , ஐ20 ஏக்டிவ் காரில் 6 ஏர்பேக் அறிமுகம்

மீண்டும் ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஏக்டிவ் காரில் 6 காற்றுப்பைகளை டாப் ஆஸ்டா (O) வேரியண்டில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எலைட் ஐ20 காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மேக்னா வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Hyundai i20 Active silver

 

முந்தைய தலைமுறை ஐ20 காரின் டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகளும் அறிமுகம் செய்திருந்த நிலையில் புதிய எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஏக்டிவ் காரில் இரு காற்றுப்பைகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஆஸ்டா (O) மற்றும் SX (i20 ஏக்டிவ்) வேரியண்டில் முன்பக்க இருகாற்றுப்பைகள் , பக்கவாட்டு மற்றும் கர்டெயின் காற்றுப்பைகள் 4 என மொத்தம் 6 ஏர்பேகினை பெற்றுள்ளது. மற்ற வேரியண்ட்களில் ஓட்டுநர் மற்றும் முன்பக்க பயணிக்கான காற்றுப்பை மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும்.

விலை விபரம்

எலைட் ஐ20 Asta (O) – ₹. 7,87,773 (1.2 Kappa  பெட்ரோல்)

எலைட் ஐ20 Asta (O) – ₹. 9,15,762 (1.4L U2 CRDi   டீசல்)

ஐ20 ஏக்டிவ் SX –  ₹. 846,654  (1.2 Kappa  பெட்ரோல்)

ஐ20 ஏக்டிவ் SX – ₹. 986,483

(சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)

Hyundai-Elite-i20-six-airbags

எலைட் ஐ20  ஆட்டோமேட்டிக்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் ஐ20 மேக்னா வேரியண்டில் இடம்பெற்றிருக்கும். இதில் 99.3 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் காமா VTVT பெட்ரோல் எஞ்சின் மாடலில் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இதன் டார்க் 130 Nm ஆகும்.  அடுத்த சில வாரங்களில் எலைட் ஐ20 ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வரவுள்ளது.

எலைட் ஐ20 ஆட்டோமேட்டிக் பற்றி படிக்க

 

Rayadurai

உலகின் முதல் மொழி எனது தாய்மொழி தமிழில் தானியங்கி செய்திகள் வழங்குவதில் பெருமை கொள்ளும் ஒரு தமிழன் உங்களின் ஆட்டோமொபைல் தமிழன் ....