ஹோண்டா சிபிஆர் 250ஆர் ரெப்சோல் ரேசிங் ரெப்லிகா எடிசன் அறிமுகம்

இந்தியாவில் மோட்டோஜிபி ஆர்வலர்களுக்காக ஹோண்டா சிபிஆர் 250ஆர் ரெப்சோல் ரேசிங் ரெப்லிகா சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெப்சோல் ஹோண்டா அணி வெற்றியை கொண்டாடும் வகையில் சிறப்பு பதிப்பு வெளியாக உள்ளது.

honda-cbr-250-racing-replica-edition-bookings-open

2016 மோட்டோ ஜிபி பந்தயங்களில் வெற்றி பெற்று 5வது முறையாக மகுடம் சூடியுள்ள மார்க் மார்க்வெஸ் வெற்றியை நினைவுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா சிபிஆர் 250ஆர் ரெப்சோல் ரேசிங் பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் நாடுமுழுவதும் உள்ள ஹோண்டா டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கியுள்ளது.

மார்க் மார்க்வெஸ் 93 மற்றும் டானி பெட்ரோசா 26 என இருவிதமான வேரியன்ட்களில் கிடைக்க உள்ள ஹோண்டா CBR 250R சிறப்பு பதிப்பில் மோட்டோஜிபி பாடி கிராபிக்ஸ் மற்றும் RC213V பைக்கின் வண்ண கலவையை பெற்றதாக விளங்குகின்றது. மேலும் இரு ரைடர்களின் எண்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ரெப்சோல் மாடலில் 250சிசி என்ஜினுடன் 26bhp மற்றும் 22.9Nm டார்க் வெளிப்படுத்தும்.இதில் 6 வேக கிநர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

2016 மோட்டோஜிபி வெற்றியை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தினை வழங்கும் வகையில் ரெப்சோல் ரேசிங் ரெப்லிகா மோட்ட்டார்சைக்கிள் ஆனது RC213V நேரடி உந்துதலில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹெச்எம்எஸ்ஐ (HMSI) மூத்த துணைத் தலைவர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், யாதுவிந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.

பகிர்க :

Reply

புதிய வடிவமைப்பில் பிரச்சனை என்றால் தொடர்புகொள்ளContact Us
+ +