1 கோடி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 2001ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்  1 கோடி ஸ்கூட்டர்கள் என்ற இலக்கை கடந்துள்ளது.

2015%2BHonda%2BActiva%2Bi
2001ம் ஆண்டில் சந்தையில் நுழைந்து இந்திய குடும்பங்களில் ஒரு அங்கமாக ஆக்டிவா மாறியுள்ளது. 2001 முதல் 2002ம் வருடங்களில் வெறும் 55,000 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையானது . அதுவே 2014 முதல் 2015ம் நிதியாண்டில் ஆண்டில் 21 லட்சம்  ஸ்கூட்டர்களாக உயர்ந்தது.
ஸ்கூட்டர் சந்தையில் 59 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ள ஹோண்டா ஆக்டிவா இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது. அவை 110சிசி மற்றும் 125சிசி என்ஜின் ஆகும் .
ஆக்டிவா 3ஜி , ஆக்டிவா ஐ மற்றும் ஆக்டிவா 125 என்ற பெயரில் விற்பனையில் உள்ள ஆக்டிவா ஸ்கூட்டரில் எச்இடி நுட்பத்துடன் 60கிமீ மைலேஜ் தருகின்றது. இந்திய தானியங்கி ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதன்முறையாக ஒரு கோடி வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.
Honda Activa crosses One Crore unit sales milestone
loading...
0 Shares
Share
Tweet
+1
Pin