1.55 லட்சம் கார்களை திரும்ப அழைக்கும் செவர்லே

ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் பீட் , என்ஜாய் மற்றும் ஸ்பார்க் கார்களில் உள்ள ரிமோட் கீலெஸ் வயரிங் பிரச்சனையை சரிசெய்ய 1.55 லட்சம் கார்களை திரும்ப அழைக்க செவர்லே முடிவெடுத்துள்ளது.

செவர்லே என்ஜாய்

ரிமோட் கீலெஸ் என்ட்ரி பிரச்சனையை சரிசெய்வதற்க்காக செவ்ர்லே ஸ்பார்க் , பீட் மற்றும் என்ஜாய் கார்களில் 2007ம் ஆண்டு முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட கார்களில் இந்த பிரச்சனை இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தபட்ட வாடிக்கையாளர்களை விரைவில் செவர்லே தொடர்பு கொள்ள உள்ளது. மேலும் உங்கள் வாகனத்தில் பிரச்சனை இருந்தால் அருகிலுள்ள உங்கள் செவர்லே டீலரை அனுகவும்.

இதற்க்கு எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. செவர்லே நிறுவனம் வாடிக்கையாளர் நலன் கருதி திரும்ப அழைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. இதுவே இந்தியாவின் மிக பெரிய திரும்ப அழைக்கும் முயற்சியாகும்.

Chevrolet Recalls 1.55 Lakh Cars In India