2015 ஆடி A6 கார் ஆகஸ்ட் 20 முதல்

வரும் ஆகஸ்ட் 20ந் தேதி 2015 ஆடி ஏ6 செடான் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வருகின்றது. ஆடி A6 காரில் தோற்றம் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்களை பெற்றுள்ளது.

audi-a6-facelift 2015 ஆடி A6 கார் ஆகஸ்ட் 20 முதல்

புதிய ஆடி ஏ6 செடான் காரில் புதிய முகப்பு விளக்குகள் போன்ற மாற்றங்களுடன் உட்புற கேபின் மற்றும் டேஸ்போர்டிலும் மாற்றங்களை பெற்றுள்ளது. என்ஜின் ஆப்ஷனில் மாற்றங்கள் இல்லை

180எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TFSI என்ஜின் மற்றும்  174 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TDI என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆடி ஏ6 காரில் புதிய பம்பர் மற்றும் கிரில் , மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்குகள் , எல்இடி டெயில் விளக்குகள் , மற்றும் டைனமிக் டர்ன் இன்டிகேட்டர் போன்றவை பெற்றுள்ளது.

உட்புறத்தில் கேபின் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இருக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஆடி A6 கார் ஆகஸ்டு 20ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது.

2015 Audi A6 Launch On August 20, 2015

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin