2015 ட்ரையம்ப் டைகர் 800 XCA விற்பனைக்கு வந்தது

ட்ரையம்ப் டைகர் XCA பைக் வரிசையில் டாப் ஆஃப் ரோட் பைக்காக ட்ரையம்ப் டைகர் 800 XCA விளங்கும். டைகர் 800 XCA பைக்கின் விலை ரூ.13.75 லட்சம் ஆகும்.

ட்ரையம்ப் டைகர் 800 XCA
ட்ரையம்ப் டைகர் 800 XCA

சிறப்பான ஆஃப் ரோட் அனுபவத்தினை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டைகர் 800 XCA பைக்கில் பல விதமான சிறப்பு வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த என்ஜினுடன் விளங்குகின்றது.

ட்ரையம்ப் டைகர் 800 எக்ஸ்சிஏ பைக்கில் அதிக தொலைவு செல்வதற்க்கு சிறப்பான சொகுசு தன்மையை வழங்கும் இருக்கையை பெற்றுள்ளது. இருக்கையை சூடுபடுத்த 650வாட்ஸ் திறன்கொண்ட அல்டர்னேட்டர் , ஹீட்டேட் கிரீப்ஸ் , எல்இடி பனி விளக்குகள் , 37 லிட்டர் கொள்ளளவு கொண்ட அலுமினிய பெட்டி , 42 லிட்டர் கொள்ளளவு கொண்ட டாப் லக்கேஜ் பாக்ஸ் போன்ற இரு லக்கேஜ் வகையை ஆப்ஷனலாக பெற இயலும்.

டைகர் XCA பைக்கில் 85பிஎஸ் ஆற்றலை தரவல்ல 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் . இதன் முறுக்குவிசை 79என்எம் ஆகும். இதில் 6 வேக டிரான்ஸ்மிஷன் உள்ளது. டிராக்‌ஷன் கன்ட்ரோல் , மல்டிபிள் ரைட் மோட் , திராட்டில் மேப் , ஸ்விட்சபிள் ஏபிஎஸ் பிரேக் , க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை உள்ளது.

ட்ரையம்ப் டைகர் 800 XCA
ads

ட்ரையம்ப் டைகர் வரிசை பைக்குகளில் டைகர் 800 XR , டைகர் 800 XC , டைகர் 800 XRx போன்ர பைக்குகளை தொடர்ந்து டைகர் 800 XCA ஆஃப் ரோட் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

ட்ரையம்ப் டைகர் 800 XCA பைக் விலை ரூ.13.75 லட்சம் (Ex-showroom Delhi)

2015 Triumph Tiger 800 XCA Launched

Comments