2016 கேடிஎம் டியூக் மற்றும் ஆர்சி பைக் வரிசை மேம்படுத்தப்பட்டுள்ளது

புதிய 2016 கேடிஎம் டியூக் 200 , டியூக் 390 மற்றும் RC 200 , RC 390 போன்ற மாடல்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை சத்தமில்லாமல் தன்னுடைய இணையத்தில் அறிமுகம் செய்துள்ளது.

2016-KTM-RC-390

கேடிஎம் டியூக் மற்றும் ஆர்சி பைக் வரிசைகளில் தோற்றத்தில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் என்ஜின் சார்ந்த மாற்றங்கள் கூடுதல் வசதிகள் மற்றும் சில நவீன வசதிகளை மட்டுமே பெற்றுள்ளது.

டியூக் மற்றும் ஆர்சி பைக்குகளில் ஆட்டோ ஹெட்லேம்ப் வசதி நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் முகப்பு விளக்குகளுக்கான சுவிட்ச் நீக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பெட்ரோல் ஆவியாகுவதனை தடுக்கும் அமைப்பு , அட்ஜெஸ்டபிள் ஹேண்டில்பார் மற்றும் புதிய இசியூ டேம்பர் போன்றவற்றை நிரந்தரமாக பெற்றுள்ளது.

குறிப்பாக ஆர்சி 390 பைக்கில் சிலிப்பர் கிளட்ச்சினை பெற்றுள்ளது. இதன் மூலம் சிறப்பான முறையில கியர்களை மாற்ற இயலும் . மேலும் மற்றபடி அனைத்தும் மாடல்களில் சில கூடுதல் வசதிகள் மற்றும் ரைடிங் , பெர்ஃபாமென்ஸ் , போன்றவற்றில் சொற்ப அளவிலான மேம்பாடுகளை மட்டுமே பெற்றுள்ளது.

தோற்றம் , ஸ்டைல் , வண்ணங்கள் போன்றவற்றில் எந்த பைக்குகளிலும் மாற்றங்கள் இல்லை. அதே போல டியூக் மற்றும் ஆர்சி பைக்குகளின் விலையிலும் மாற்றங்கள் இல்லை.

கேடிஎம் டியூக் 200 மற்றும் ஆர்சி 200 பைக்குகளில் 25 hp திறனை வெளிப்படுத்தும் 199.5CC ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேடிஎம் டியூக் 390 மற்றும் ஆர்சி 390 பைக்குகளில் 43.5 hp திறனை வெளிப்படுத்தும் 373.2CC ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2016 கேடிஎம் விலை விபரம்

KTM Duke 200 – ரூ. 1.40 லட்சம்
KTM Duke 390 – ரூ. 1.91 லட்சம்
KTM RC 200 – ரூ. 1.65 லட்சம்
KTM RC 390 – ரூ. 2.09 லட்சம்

{ அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலை }

[wpsocialite]

Comments

loading...