2016 சுஸூகி ஹயபுசா பைக் புதிய வண்ணங்களில்

2016 சுஸூகி ஹயபுசா சூப்பர் பைக்கில் மூன்று விதமான புதிய வண்ணங்களை பெற்றுள்ளது. புதிய சுஸூகி ஹயபுசா பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

2016-Suzuki-Hayabusa-Daring-Red 2016 சுஸூகி ஹயபுசா பைக் புதிய வண்ணங்களில்
சுஸூகி ஹயபுசா பைக்

சூப்பர் பைக் விரும்பிகளின் விருப்பமான சுஸுகி ஹயபுசா பைக் ரூ. 15.95 லட்சம் விலையில் கிடைக்கின்றது.  புதிய வண்ணங்களை மட்டுமே பெற்றுள்ள ஹயபுசா பைக்கில் என்ஜின் மற்றும் பாடி பேனல்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

சுஸூகி ஹயபுசா பைக்கில்  197பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர்களை கொண்ட 1340சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 155என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர். 0 முதல் 100கிமீ வேகத்தினை  வெறும் 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

2016-Suzuki-Hayabusa-Thunder-Gray 2016 சுஸூகி ஹயபுசா பைக் புதிய வண்ணங்களில்
சுஸூகி ஹயபுசா பைக்

2016-Suzuki-Hayabusa-White 2016 சுஸூகி ஹயபுசா பைக் புதிய வண்ணங்களில்
சுஸூகி ஹயபுசா பைக்

சிவப்பு கலந்த சில்வர் , கிரே கலந்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்த சில்வர் என மொத்தம் மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது. சிறப்பான செயல்திறன் , ஹேன்டிலிங் , நிலைப்பு தன்மை போன்றவற்றை பெற்றுள்ள மிக சிறந்த பைக்காக சுசூகி ஹயபுசா விளங்குகின்றது.

டுகாட்டி டியாவேல் , டுகாட்டி 1299 பனேகல் , கவாஸாகி நின்ஜா ZX-14R  , டுகாட்டி மான்ஸ்டர் 1200 மற்றும் பெனெல்லி TNT 1190 போன்ற பைக்குகளுக்கு   சுஸூகி ஹயபுசா போட்டியாக விளங்குகின்றது.

2016 சுஸூகி ஹயபுசா சூப்பர் பைக் ; ரூ.15.95 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

2016 Suzuki Hayabusa Gets 3 New Colours

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin