2016 டொயோட்டா பிளாட்டினம் எட்டியோஸ் , லிவோ விற்பனைக்கு வந்தது

2016 டொயோட்டா பிளாட்டினம் எட்டியோஸ் மற்றும் எட்டியோஸ் லிவா கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எட்டியோஸ் காரின் தொடக்க விலை ரூ. 6.24 லட்சம் மற்றும் லிவோ காரின் தொடக்க விலை ரூ. 5.24 லட்சம் ஆகும்.

toyota-platinum-etios 2016 டொயோட்டா பிளாட்டினம் எட்டியோஸ் , லிவோ விற்பனைக்கு வந்தது

தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது. புதிய எட்டியோஸ் மற்றும் லிவோ கார்களின் ஸ்போர்ட்டிவ் தோற்ற அமைப்புடன் இரட்டை வண்ண கலவையில் எட்டியோஸ் லிவோ வந்துள்ளது. முகப்பில் ஸ்போர்ட்டிவ் பம்பர் , கிரில் தோற்ற அமைப்பு , பக்கவாட்டில் பெரிதான மாற்றங்கள் இல்லாமல் பின்பக்கத்தில் பம்பர் டெயில் விளக்கு போன்றவை மேம்பாடு பெற்றுள்ளன.

புதுப்பபிக்கப்பட்ட இருக்கைகள் , புதிய மேம்பாடு மிக்க இன்டிரியர் , புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், இரண்டு முன்பக்க காற்றுப்பைகள் , ஐஎஸ்ஓபிக்ஸ் சைல்டு இருக்கை , ஏபிஎஸ் மேலும் புதிய வசதிகளாக எலக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர், ரியர் சென்சார் மற்றும் ஆர்ம்ரெஸ்ட் போன்றவற்றை பெற்றுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் மேம்பாடுகள் , இன்ஜின் மவூன்டிங் மற்றும் கேபின் இன்சுலேஷன் போன்றவற்றை மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எட்டியோஸ் லிவோ மற்றும் எட்டியோஸ் கார்களின் இன்ஜின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. 90 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 68 bhp ஆற்றல் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பெற்றுள்ளது. இரு கார்களிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

toyota-platinum-etios-interior 2016 டொயோட்டா பிளாட்டினம் எட்டியோஸ் , லிவோ விற்பனைக்கு வந்தது

புதிய டொயோட்டா எட்டியோஸ் லிவோ விலை
Variant  பெட்ரோல் டீசல்
STD Rs 5.24 lakh Rs 6.61 lakh
DXL Rs 5.58 lakh Rs 6.94 lakh
High Rs 5.73 lakh Rs 7.02 lakh
Premium Rs 6.28 lakh Rs 7.44 lakh

 

புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் விலை
Variant பெட்ரோல் டீசல்
STD Rs 6.43 lakh Rs 7.56 lakh
DLX Rs 6.83 lakh Rs 7.96 lakh
High Rs 7.17 lakh Rs 8.30 lakh
Premium Rs 7.74 lakh Rs 8.87 lakh

( அனைத்தும் எக்ஸ்ஷோரூம் மும்பை விலை )

 

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin