2016 முதல் கார் விலை உயர்வு – updated

2016 முதல் கார் விலையை பல நிறுவனங்கள் உயர்த்த திட்டமிட்டுள்ளன. வரும் புதிய 2016 கார் விலை உயர்வு பெறும் நிறுவனங்கள் மாருதி சுசூகி , ஹூண்டாய் , டொயோட்டா , ஸ்கோடா , நிசான் , டட்சன் ,  டாடா, மெர்சிடிஸ் ,  பிஎம்டபிள்யூ , மினி மேலும் சில வரவுள்ளன.

2015-Maruti-DZire-Facelift1-1024x620

உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதனாலே பெருமெபாலான கார் நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்துகின்றன. நாளுக்குநாள் அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை ஈடுகட்டவே இந்த நடவடிக்கையை எடுக்கப்படுகின்றது.

  1. மாருதி சுசூகி

இந்தியாவின் முதன்மையான ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி அனைத்து கார் மாடல்களின் விலையும் ரூ.20000 வரை உயர்த்தியுள்ளது. இதுபற்றி மாருதி கூறியதாவது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதனால் அதனை ஈடுகட்ட வேண்டிய காட்டயத்தில் உள்ளோம் என தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் விலை உயர்வை சந்திப்பதனால் இந்த வருடத்தின் மாடல்களை விற்பனை செய்ய டீலர்களுக்கு எளிதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

2. ஹூண்டாய்

இந்தியளவில் இரண்டாமிடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் விலை உயர்வு பற்றி குறிப்பிட்டள்ளது என்னவென்றால் ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களே விலை உயர்வுக்கு காரணமாகும்.

ஹூண்டாய் நிறுவனத்தின்  அனைத்து கார் மாடல்களும் ரூ.8000 முதல் ரூ.30000 வரையிலான விலை உயர்வினை சந்திக்கின்றது.

hyundai-elite-i20

3. டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் விலை உயர்வு பற்றி தெரிவிக்கையில் ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் உற்பத்தி செலவீனங்களான மின்சாரம் , பொருள் உற்பத்தி செலவு மற்றும் பராமரிப்பு போன்ற செலவுகள் போன்றவை அதிகரித்ததே காரணம் என கூறியுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின்  அனைத்து கார் மாடல்களும் 3 சதவீத விலை உயர்வினை சந்திக்கின்றது.

Toyota-Fortuner

4. ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனம் விலை உயர்வு பற்றி கூறுகையில் உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் சந்தையின் சூழ்நிலை மாறிவருவதே காரணம் என கூறுகின்றது.

ஸ்கோடா இந்திய நிறுவனத்தின் கார்கள் 2 % முதல் 3 % வரை அதாவது ரூ.14,000 முதல் ரூ.50,000 வரையிலான விலை உயர்வை பெறுகின்றது.

Skoda-Rapid-Anniversary-Edition-1024x768

 

5. நிசான்

நிசான் கார்களின் விலை 3 சதவீதம் வரை உயர்வினை சந்திக்கின்றது . நிசான் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான டட்சன் கார்களும் 3  சதவீதம் வரை உயர்வினை பெறுகின்றது. சந்தையின் தன்மைகேற்ப விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.

nissan-micra-x-shift

6. மெர்சிடிஸ் பென்ஸ்

சொகுசு கார் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய நிறுவனம் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதனால் அதனை ஈடுகட்ட வேண்டிய நிலையில் 2 சதவீத விலை உயர்வினை  மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.

2016-Mercedes-A-Class-1024x683

 

7. பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ மற்றும் மினி பிராண்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல்களும் 3 % விலை உயர்வை பெறுகின்றது.

BMW-X1-M-Sport-1024x765

8. டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து மாடல்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

Tata-Safari-Storme-1024x683

Updated

9. ஹோண்டா

ஹோண்டா இந்திய நிறுவனம் தன்னுடைய அனைத்து மாடல்களின் விலைகளையும் ரூ.10,000 முதல் 16 ,000 வரை உயர்த்த உள்ளது. விலை உயர்வின் காரனம்  உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணம் என கூறுகின்றது.

Honda-Brio-Amaze

 

இந்த விலை உயர்வு அனைத்தும் வரும் ஜனவரி 1 , 2016 முதல் அமலுக்கு வருகின்றது. இந்த வரிசையில் மேலும் சில நிறுவனங்கள் இடம் பிடிக்கும்.

2016 cars price hike details and list

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin