2016 ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி அறிமுகம் – Frankfurt Motor show

புதிய ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி கார் வரும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ள நிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2016 சான்டா ஃபீ எஸ்யூவி காரில் தோற்ற மாற்றம் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.

 ஹூண்டாய் சான்டா ஃபீ
 ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி

வரும் 15ந் தேதி தொடங்க உள்ள 2015 பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில் 60க்கு மேற்பட்ட மாடல்கள் மற்றும் கான்செப்ட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சான்டா ஃபீ காரில் வெளிதோற்றத்தில் முகப்பில் புதிய முகப்பு விளக்குகள் , பனி விளக்குகள் , எல்இடி பகல் நேர விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது. முகப்பில் உள்ள குரோம் பட்டைகளில் அகலம் அதிகரிக்கப்பட்டு அதில் ஹூண்டாய் லோகோ பதிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் இல்லை. பின்புறத்தில் டெயில் எல்இடி கிராஃபிக்ஸ் புதிது , பம்பர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புகைபோக்கி செவ்வக வடிவம் மாற்றப்பட்டுள்ளது.

 ஹூண்டாய் சான்டா ஃபீ

உட்புறத்தில் மிக அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மமென்ட் அமைப்பு மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

சான்டா ஃபீ என்ஜின் பற்றி எவ்விதமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்பததால் அதே என்ஜின் ஆப்ஷன் தொடரலாம் என தெரிகின்றது. கூடுதலாக சில பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளது. அவை அவசரகால பிரேக் , பிளைன்ட் ஸ்பாட் , ரியர் க்ராஸ் ட்ராஃபீக் அலர்ட் , அடாப்ட்டிவ் ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் , லேன் மாறுதல் உதவி மற்றும் ஹை பீம் உதவி போன்றவை உள்ளது.

இந்தியாவிற்க்கு புதிய ஹூண்டாய் சான்டா ஃபீ வரும் 2016ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

 ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி
 ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி

2016 Hyundai Santa Fe to debut at Frankfurt Motor show

Comments

loading...