இந்தியாவின் சிறந்த கார் -2016

2016 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த காராக ஹூண்டாய் க்ரெட்டா தேர்வு பெற்றுள்ளது. சுசூகி பலேனோ மற்றும் ரெனோ க்விட் கார்களை வீழ்த்தி க்ரெட்டா இந்தியாவின் சிறந்த கார் 2016 ( Indian Car of the Year 2016 – ICOTY ) பட்டத்தினை வென்றுள்ளது.

hyundai-creta-icoty-2016 இந்தியாவின் சிறந்த கார் -2016

காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரில் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என்ஜின்கள் மேலும் மெனுவல் தவிர ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் உள்ளது.

தொடர்ந்து மூன்றுமுறை இந்தியாவின் சிறந்த கார் விருதினை பெற்றுள்ள ஒரே நிறுவனம்  ஹூண்டாய் மோட்டார்ஸ் மட்டும்தான். கடந்த ஆண்டு எலைட் ஐ20 (2015) , கிராண்ட் ஐ10 (2014) மற்றும் க்ரெட்டா (2016).

மேலும் படிக்க ; இந்தியாவின் சிறந்த பைக் – IMOTY 2016

4,00,000 லட்சம் விசாரிப்புகளுடன் 74,000 முன்பதிவுகளுடன் 16,271 வெளிநாட்டு ஆர்டர்களை பெற்றுள்ள ஹூண்டாய் க்ரெட்டா மிக சரியான எஸ்யூவி கார் மாடலாக விளங்குகின்றது.

மேலும் படிக்க ; ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவின் சிறந்த கார் 2016 விருதினை வென்றது குறித்து கருத்து தெரிவித்த Y K Koo, MD & CEO ஹூண்டாய் மோட்டார்ஸ் ” மேக் இன் இந்தியா மூலம் தயாரிக்கப்பட்டு சர்வதேச மாடலாக பெர்ஃபெக்ட் எஸ்யூவி கார் மாடலாக க்ரெட்டா விளங்குகின்றது. க்ரெட்டா  இந்தியாவின் சிறந்த கார் 2016 என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஹூண்டாய் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாகும். வாடிக்கையாளர்கள் , பார்டனர் , பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

hyundai-creta-suv-icoty-2016-1024x515 இந்தியாவின் சிறந்த கார் -2016

Hyundai CRETA Wins Indian Car of the Year 2016 (ICOTY)

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin