2017 சாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி வருகை – 2016 பாரீஸ் மோட்டார் ஷோ

2016 பாரீஸ் மோட்டார் ஷோவில் புதிய தலைமுறை 2017 சாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சாங்யாங் LIV-1 கான்செப்ட் மாடலின் தாத்பரியங்களை பெற்ற மாடலாக ரெக்ஸ்டான் எஸ்யூவி விளங்கும்.

2017-ssangyong-rexton-concept

அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்று புதிய மாடல்களை மஹிந்திரா குழுமத்தின் சாங்யாங் நிறுவனம் களமிறக்க உள்ளது. மூன்று கார் மாடல்களும் உலக அரங்கில் பல சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புத்தம் புதிய ரெக்ஸ்டான் கார் Y400 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட உள்ள ரெக்ஸ்டான் கார் விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான நீளமுடன் மேம்படுத்தப்பட்ட வசதிகள் சிறப்பான டிசைன் தாத்பரியங்களுடன் விளங்கும். புதிய ரெக்ஸ்டான் காரில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் போன்றவற்றில் கிடைக்கும். உட்புறத்தில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் லேன் வார்னிங் மற்றும் ஆட்டோமெனஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றை பெற்றுள்ளது.  புதிய மாடல் 2017 ஆம் வருடத்தில் விற்பனைக்கு வரலாம்.

2017-ssangyong-rexton-concept-interior

மேலும் ரெக்ஸ்டான்  எஸ்யுவி காரினை அடிப்படையாக கொண்ட பிக்அப் டிரக் மாடலை அடுத்த சில வருடங்களில் அறிமுகம் செய்ய உள்ளது. பிக்அப் டிரக்கில் ரெக்ஸ்டான் என்ஜின் பகிர்ந்துகொள்ளும். டொயோட்டா ஹைலக்ஸ் , ஃபோர்டு ரேன்ஜர் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

மூன்றாம் தலைமுறை கொரண்டோ எஸ்யூவி கார் டிவோலி காரின் வடிவ தாத்பரியங்களை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2017-ssangyong-rexton-concept-rear

Comments

loading...