4 வயது சிறுமி ஓட்டிய வால்வோ 18 டன் டிரக் -வீடியோ

வால்வோ  நிறுவனத்தின் 18 டன் டிரக்கினை 4 வயது சிறுமி சோஃபீ பிரவுன் ரேடியோ கன்ட்ரோல் மூலம் ஓட்டி அசத்தியுள்ளார்.  ரீமோட் காரை இயக்குவது போலவே நிஜ டிரக்கினை தன் இஷ்டத்துக்கு சிறப்பாக ஓட்டி உள்ளது.

volvo-fmx-truck-1024x683

வால்வோ 18 FMX டிரக்கில் பல நவீன கட்ட சோதனைகளை இதன் மூலம் வால்வோ டிரக் நிறுவனம் பரிசோதித்துள்ளது. குறிப்பாக 360 டிகிரி கோணத்தில் வாகனம் உருண்டால் மீண்டும் தானாகவே சரியான நிலைமைக்கு திரும்புவது போன்றவை அடங்கும்.

loading...

360 டிகிரி உருண்டால்

சுரங்கம் , சரிவான சாலைகள் மற்றும் மலைகளில் வாகனம் உருண்டால் ஓட்டுநருக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் பாதுகாக்கும் அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது.

மேலும் இந்த சோதனையில் சோதிக்கப்பட்ட வசதிகள்

தானியங்கி டிராக்‌ஷன் கன்ட்ரோல் – தேவைப்படும்பொழுது தானியங்கி முறையில் 4 அனைத்து வீல்களும் இயங்கி சிறப்பான டிராக்‌ஷனை தரவும் , குறைவான தேய்மானம் மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தரும்.

ஸட்ரடி ஃபிரென்ட் கார்னர் – அடிச்சட்டத்துடன் இணைந்த மிக வலுவுமிக்க 3மிமீ தடிமன் உள்ள ஸ்டீல் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கிட் பிளேட் – இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கிட் பிளேட் 3மிமீ தடிமன் கொண்ட ஸ்டீலால் உருவாக்கப்பட்டுளது. இது கற்களால் ஏற்படும் தேய்மானத்தை தவிர்க்கும்.

30 செமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட வால்வோ FMX டிரக்கில் வாட்டர்ஃபூரூஃப் வசதி உள்ளது. இதனால் துருபிடிக்காமல் தடுக்க இயலும்.

Four-year-old Sophie tests an 18 ton Volvo truck

loading...