56,000 பைக்குகளை ஒரேநாளில் விற்பனை செய்த ஹோண்டா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சிபி ஷைன் பைக் மாடலை விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் 56,000 பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

சிபி ஷைன்

125சிசி பைக் பிரிவில் சிறப்பான பங்களிப்பினை அளித்து வரும் சிபி ஷைன் பைக்கிற்க்கு சிறப்பு கடன் திட்டத்தை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.  இந்த திட்டத்தில் முன்பணமாக ரூ.5999 செலுத்தி மாதத் தவனையாக ரூ.999 செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கடன் திட்டமானது வரும் அக்டோபர் 29ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். கடந்த 17ந் தேதி அன்று மட்டும் 56,000 பைக்குகளை ஒரேநாளில் விற்பனை செய்துள்ளது.

இதுபற்றி ஹோண்டா மோட்டார்சைக்கிள் விற்பனை பிரிவு மூத்த தலைவர் குல்ரியா தெரிவிக்கையில் இது கடந்த விநாயகர் சதுர்த்தி விற்பனையை விட 40 % அதிகமாகும்.

ads

இந்த கடன் திட்டத்தில் ரூ.7300 வரை சேமிக்க முடியும். இந்த திட்டம் வரும் அக்டோபர் 29ந் தேதி வரை இருக்கும்.

Comments