6 இலட்சத்தில் எந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார் வாங்கலாம்

  ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 10வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கேள்வியை கருத்துரையில் கேட்டவர் Advocate P.R.Jayarajan ஆவார். அவரின் கேள்விக்கான பதில்..

  tamil automobile


  6 இலட்சத்திற்க்குள் என்பதால்  ஹேட்ச்பேக் பிரிவில் 3 மற்றும் செடான் பிரிவில் 1 உள்ளது.

  1. ஹூன்டாய் ஐ10

  ஹூன்டாய் ஐ10 காரில் 2 வேரியன்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. அவை ஐ10 1.2 ஸ்போர்ட்ஸ் AT மற்றும் ஐ10 1.2 அஸ்டா சன்ரூஃப் AT ஆகும். 5 நபர்கள் இலகுவாக பயணிக்க முடியும்.1197 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  மைலேஜ் 11.43kmpl ஆகும். 

  ஐ10 1.2 ஸ்போர்ட்ஸ் AT விலை 5.38 இலட்சம் மற்றும் 

  ஐ10 1.2 அஸ்டா சன்ரூஃப் AT விலை 6.31 இலட்சம் ஆகும்

  itech i10

  2. ஹோன்டா பிரியோ

  ஹோன்டா பிரியோ காரில் 2 வேரியன்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. அவை பிரியோ எஸ் AT மற்றும் பிரியோ வி AT ஆகும்.
  ads

  1198 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  மைலேஜ் 16.5kmpl ஆகும். 

  பிரியோ எஸ் AT விலை 5.85 இலட்சம் மற்றும்

  பிரியோ வி AT விலை 6.11 இலட்சம் ஆகும்.

  brio at  3. மாருதி சுசுகி ரிட்ஸ்

  ரிட்ஸ் காரில் 1 வேரியன்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. சுசுகி ரிட்ஸ் Vxi AT ஆகும்.1197 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.


  மைலேஜ் 17.2kmpl ஆகும். 

  சுசுகி ரிட்ஸ் Vxi AT விலை 6.35  இலட்சம் ஆகும்.

  ritz


  செடான் பிரிவில் 

  1.மாருதி சுசுகி ஸ்விஃபட் டிசையர்

  ஸ்விஃபட் டிசையர் காரில் 1 வேரியன்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. ஸ்விஃபட் டிசையர் Vxi AT ஆகும். 1197 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.


  மைலேஜ் 12.25kmpl ஆகும். 

  ஸ்விஃபட் டிசையர் Vxi AT விலை 6.80 இலட்சம் ஆகும்.

  swift dzire


  ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை

  1.  ஹோன்டா பிரியோ

  2. மாருதி சுசுகி ரிட்ஸ்
  விலை விபரங்கள் அனைத்தும் சென்னை விலையாகும்.

  Comments