இஸ்ரேலில் பிரதமர் மோடி ரசித்த ஜீப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்..!

இஸ்ரேல் நாட்டில் மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்களுக்கு இஸ்ரேல் போன்ற வறண்ட தேசங்களில் கடல்நீரை குடிநீராக மாற்றும் கல்-மொபைல் (Gal-mobile) ஜீப் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது குறித்து இங்கே காணலாம்.

 கல்-மொபைல் வாகனம்

இஸ்ரேல் நாட்டில் அமைந்துள்ள ஹைஃபாவில் உள்ள ஓல்கா கடற்கரையில் இந்திய பிரதமருக்கு கடல்நீரை குடிநீராக்கும் வாகனத்தின் செயல்விளக்கம் குறித்து அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்நாயுஹுவை அவர்களும் இணைந்து பார்வையிட்ட படங்கள் மற்றும் தகவல்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

இஸ்ரேல் போன்ற வறட்சி மிகுந்த தேசங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் கடல்நீர் முக்கிய பங்காற்றி வருகின்றது.  மேலும் இந்த வாகனங்கள் பூகம்பம், வெள்ளம், குடிநீர் பற்றாக்குறை அதிகமுள்ள பகுதிகளுக்கு இந்த வாகனத்திலிருந்து நீரை எடுத்துச் செல்வதற்கு மிகுந்த துனை புரியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகனத்தில் உள்ள இயந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20,000 லிட்டர் வரை கடல்நீரை குடிநீராக மாற்றலாம், அதுவே உவர் மற்றும் சேறு கலந்த அல்லது அசுத்தமான நதி நீர் போன்றவற்றை நாள் ஒன்றுக்கு 80,000 லிட்டர் வரை சுத்தம் செய்யும் திறன் கொண்டதாக கல் மொபைல் சிறப்பு வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு தலைவர்களும் கடல்நீரை சுத்தகரிப்பு முறை குறித்து ஆய்வு செய்த பின்னர் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை பருகி அதன் தரத்தை சோதனை செய்துள்ளனர். எதிர்காலத்தில் இந்தியாவிலும் இதுபோன்ற வாகனங்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

Comments

loading...