மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி விலை குறைந்தது..!

ஜிஎஸ்டி வருகையால் கார் , எஸ்யூவி மற்றும் பைக்குகள் என பெரும்பாலும் விலை குறைக்கப்பட்ட நிலையில் மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி விலை ரூ. 1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை குறைந்துள்ளது.

மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி

இந்தியாவில் மிட்சுபிஷி நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்ற எஸ்யூவி மாடல்களில் பிரசத்தி பெற்ற மாடலான பஜெரோ ஸ்போர்ட் மாடலில் சராசரியாக ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை டீலர்களை பொறுத்து விலை குறைக்கப்பட்டுள்ளது.

Ads

177 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 350 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் என இரண்டிலும் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மாடல் பழையது ஜிஎஸ்டி வித்தியாசம்
Pajero Sport AT 4×2 ரூ.27,69,120 ரூ. 26,64,380 ரூ. 1,04,740
Pajero Sport 2.5L AT 4×2 Special Edition ரூ.28,18,610 ரூ. 27,13,870 ரூ. 1,04,740
Pajero Sport 2.5L MT 4×4 ரூ. 28,09,520 ரூ. 27,04,780 ரூ. 1,04,740
Pajero Sport 2.5L MT 4×4 Special Edition ரூ.28,59,010 ரூ.27,54,270 ரூ.1,04,740

Comments