பினின்ஃபரினா டிசைன் நிறுவனத்தை வாங்கிய மஹிந்திரா

இத்தாலியின் பினின்ஃபரினா டிசைன் நிறுவனத்தின்  76.06 % பங்குகளை மஹிந்திரா குழுமம் வாங்கியுள்ளது. உலக பிரசத்தி பெற்ற கார்களை வடிவமைத்த  நிறுவனம் பினின்ஃபரினா ஆகும்.

mahindra

loading...

பினின்ஃபரினா டிசைன் நிறுவனம் கார் டிசைன் வடிவமைப்பு மற்றும் கோச்களை வடிவமைக்கும் உலகின் சிறந்த டிசைன் நிறுவனங்களில் ஒன்றாகும் . இந்த நிறுவனத்தின் கைவன்னத்தில் உருவாகியவைதான் ஃபெராரி கார்களாகும். இந்த நிறுவனத்தின் சில முக்கிய வாடிக்கையாளர்கள் ரோல்ஸ் ராய்ஸ் , மஸராட்டி , ஆல்ஃபா ரோமியோ, ஃபெராரி, பீஜோ போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கப்பல் நிறுவனங்களும் , ரயில் நிறுவனங்களும் உள்ளன.

1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பினின்ஃபரினா டிசைன் நிறுவனம் பின்கார் S.r.l மூலம் செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வந்த இந்த நிறுவனத்தினை மஹிந்திரா குழுமத்தின் மஹிந்திரா டெக் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா என இரு நிறுவனங்களின் வாயிலாக சுமார் டாலர் 185 மில்லியன் தொகையில் வாங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் இதனை வாங்கியிருந்தாலும் தனியாகவே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் சேர்மேன் ஆனந்த மஹிந்திரா இது பற்றி கூறுகையில் பாரம்பரிய மிக்க டிசைன் நிறுவனமான பினின்ஃபரினா நிறுவனத்தினை கையகப்படுத்தியது மூலம் மஹிந்திரா டெக் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் எதிர்கால தேவைகேற்ப இந்த நிறுவனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

loading...