மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி அறிமுகம் விரைவில்

மஹிந்திரா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கேயூவி100 அல்லது எக்ஸ்யூவி100 என்ற பெயரிலோ வரும் டிசம்பர் 18ந் தேதி அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.  சிறிய ரக எஸ்யூவி காராக இந்த மாடல் விளங்கும்.

mahindra-s101-rear மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி அறிமுகம் விரைவில்

கேயூவி100 அல்லது எக்ஸ்யூவி100 இறுதி பெயர் வரும் டிசம்பர் 18ந் தேதி அறிமுகத்தின் பொழுது உறுதியாகும். இந்த காம்பேக்ட் ரக எஸ்யூவி காரானது மாருதி வேகன்ஆர் காருக்கு நேரடியான போட்டியாக விளங்கும்.

மஹிந்திரா கேயூவி100 காரில் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்  டியூவி300 காரில் பொருத்தப்பட்டிருந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வரவுள்ளது. மிகவும் ஸ்டைலிசான கிராஸ்ஓவர் ரக மாடலாக விளங்க உள்ள இந்த காரில் ஏஎம்டி மாடலும் வரவுள்ளது.

5 முதல் 6 இருக்கைகள் இந்த காரில் இடம்பெற்றிருக்கலாம் என தெரிகின்றது. மேலும் தாரளமான இடவசதியை பெற்றிருக்கலாம். பாடியை சுற்றிலும் கருப்பு நிற கிளாடிங் மற்றும் எடுப்பான தோற்றத்தினை வழங்கும்.

Mahindra compact SUV named as KUV100

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin