என்ன ஸ்கூட்டர் வாங்கலாம் ?

ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து கேள்விகளை இங்கே பதிவு செய்து உங்களுடைய சந்தேகளுக்கு விடை பெறுவதற்கான பகுதியே மோட்டார் டாக்கீஸ் ஆகும். கேள்விகளை பதிவு செய்ய வாருங்கள்.. மேலும் மற்றவர்களுக்கும் உங்கள் பதிலை தாருங்கள்..

3
Kalaiselvi 9 Rep.

எனக்கு தினமும் 5 கிமீ அலுவலகம் சென்று வர என்ன ஸ்கூட்டர் வாங்கலாம்.. எனக்கு yamaha fascino ரொம்ப பிடிச்சிருக்கு அது நல்லாயிருக்குமா ? இல்ல வேற வாங்கலாமா ?

Rayadurai.M answered
  3
  Rayadurai.M 232 Rep.

  நன்றி.. ஆட்டோமொபைல் தமிழன் தளத்தை தொடர்பு கொண்டமைக்கு…@Kalaiselvi

  யமஹா நிறுவனத்தின் மிக சிறப்பான கிளாசிக்கல் டிசைனை அடிப்படையாக கொண்ட ஃபேசினோ ஸ்கூட்டர் மிகவும் சிறப்பான மாடலாக விளங்குகின்றது. தாரளமாக இந்த ஸ்கூட்டரை நீங்கள் தேர்வு செய்யலாம்.

  இந்த ஸ்கூட்டரில் 113சிசி பூளு கோர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 7.5பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் முறுக்குவிசை 8.1என்எம் ஆகும். யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 66கிமீ (அராய் மைலேஜ்) ஆகும்..

  ஒட்டுதலில் கிடைக்கின்ற சராசரி யமஹா ஃபேசினோ மைலேஜ் 40 கிமீ முதல் 55 கிமீ ஓட்டுதலை பொறுத்து மாறுபடலாம்…

  யமஹா ஃபேசினோ சென்னை ஆன்-ரோடு விலை ரூ.65,090

  Rayadurai.M edited answer
  ×

  Login

  Question stats

  • Active
  • Views268 times
  • Answers1 answer
  • Followers1 follower