டாடா டியாகோ கார் சர்வீஸ் விபரங்கள் [Solved]

ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து கேள்விகளை இங்கே பதிவு செய்து உங்களுடைய சந்தேகளுக்கு விடை பெறுவதற்கான பகுதியே மோட்டார் டாக்கீஸ் ஆகும். கேள்விகளை பதிவு செய்ய வாருங்கள்.. மேலும் மற்றவர்களுக்கும் உங்கள் பதிலை தாருங்கள்..

1
Manikandan 17 Rep.

டாடா டியோகா காரின் ஓட்டுதல் மைலேஜ் மற்றும் சர்வீஸ் விபரங்கள் என்ஜின் தரம் பற்றி எனக்கு விளக்கமான தகவல்கள் தேவை …. மேலும் டாக்சி சந்தைக்கு கிடைக்கின்றதா ?

Manikandan edited question
Question is closed, new answer are not accepted.

  Best answer

  2
  Rayadurai.M 232 Rep.

  மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களுடன் விளங்கும் டாடா டியாகோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் டாடாவின் நம்பிக்கை நாயகனாக டியாகோ கார் திகழ்கின்றது.

  டியாகோ மைலேஜ் விபரம்

  டீசல் டியாகோ காரின் மைலேஜ் 23 சிட்டி மற்றும் 28 கிமீ ஹைவேஸ் என நிறுவனம் கிளைம் செய்தாலும் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு 17 முதல் 23 கிமீ வரை கிடைக்கும்.

  பெட்ரோல் டியாகோ காரின் மைலேஜ் 20 சிட்டி மற்றும் 23 கிமீ ஹைவேஸ் என நிறுவனம் கிளைம் செய்தாலும் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு 14 முதல் 16 கிமீ வரை சராசரியாக கிடைக்கும்.

  ஒட்டுதல் திறனை பொருத்து மைலேஜ் மாறுபடலாம்..

  டியாகோ காரின் சர்வீஸ் விபரம்

  » முதல் சர்வீஸ் – 2 மாதங்கள் அல்லது 1500 கிமீ (+/- 500 Kms) (Labor Free Service)

  » 2வது சர்வீஸ் – 6 மாதங்கள் அல்லது 7500 கிமீ (+/- 500 Kms) (Labor Free Service)

  » 3வது சர்வீஸ் – 12 மாதங்கள் அல்லது 15000 கிமீ (Labor Free Service)

  » இதனை தொடர்ந்து – ஓவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 7500 கிமீ (கட்டண சர்வீஸ்)

  ஒவ்வொரு 7500 கிமீ ஒரு முறை பாடி வாஷ் , ஜென்ரல் செக்கப் , ஆயில் டாப் அப் , ஏசி ஃபில்டர் மற்றும் ஏர் ஃபில்டர் செக்கப் , டயர் மாற்றி போடுதல் போன்றவை கிடைக்கும் இதற்கு கட்டணம் ரூ.800 முதல் ரூ.1000 வரை ஆகலாம்.

  ஒவ்வொரு 15,000 கிமீ க்கு ஒரு முறை ஆயில்  , ஆயில் ஃபில்டர் மாற்றுதல் , பிரேக் செக்கப் போன்றவை இருக்கும்.

  டியாகோ டாக்சி

  டாக்சி சந்தைக்கு டியாகோ காரை டாடா இதுவரை அனுமதிக்கவில்லை வரும் காலத்தில் அனுமதிக்க வாய்ப்புகள் உள்ளது.

  Attachments

  tata-tiago.png
  Manikandan selected as best answer
  ×

  Login

  Question stats

  • Active
  • Views119 times
  • Answers1 answer
  • Followers1 follower