டோமினார் 400 பைக் குறைந்த விலை ஏன் ?

ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து கேள்விகளை இங்கே பதிவு செய்து உங்களுடைய சந்தேகளுக்கு விடை பெறுவதற்கான பகுதியே மோட்டார் டாக்கீஸ் ஆகும். கேள்விகளை பதிவு செய்ய வாருங்கள்.. மேலும் மற்றவர்களுக்கும் உங்கள் பதிலை தாருங்கள்..

2
Manikandan 17 Rep.

சமீபத்தில் வந்த பஜாஜ் டோமினார் 400 விலை குறைவுக்கு காரணம் தரம் குறைவா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா ?

Rayadurai.M edited question
Question is closed, new answer are not accepted.
  2
  Rayadurai.M 232 Rep.

  டோமினார் 400 பைக்கின் விலை குறைப்பின் பின்னனி என்ன ? நல்லதொரு கேள்வி நண்பரே..

  கேடிஎம் டியூக்390 VS டோமினார் 400 வித்தியாசங்கள்..

  பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள டோமினார் 400 பைக் கேடிஎம் டியூக் 390 பைக்கை விட ரூ.50,000 வரை விலை குறைவாக அமைய காரணங்கள் இதோ…

   

  என்ஜின் பவர்

  டியூக் 390 பைக் விலையை விட டோமினார்400 குறைய காரணம் டியூக் 390 பவர் 44 ஹெச்பி  ஆனால் டோமினார் பவர் வெறும் 34.5 ஹெச்பி மட்டுமே. இதில் டியூக் பைக்கில் double overhead cam (DOHC) ஆனால் டோமினாரில் single overhead cam (SOHC) பயன்படுத்தப்பட்டுள்ளது.

  சஸ்பென்ஷன்

  பல்சர் சிஎஸ்400 2014 கான்செப்ட் மாடலில் யூஎஸ்டிஃபோர்க்குகளை பெற்றிருந்த நிலையில் விற்பனைக்கு வந்த பொழுது சாதரன அப்சைடுடவுன் ஃபோர்க்குகளை பெற்றுள்ளது. பின்புறத்திலும் சாதரன மோனோஷாக் ஆப்சார்பர் இடம்பெற்றுள்ளது. ஆனால் கேடிஎம் டியூக் 390 பைக்கில் பல்வேறு சிறப்புஅம்சங்களுடன் கூடிய விலை உயர்ந்த யூஎஸ்டிஃபோர்க்குகள் மற்றும் WP மோனோஷாக் இடம்பெற்றுள்ளது.

  டயர்

  டியூக்390 பைக்கில் உயர்ரக மெட்டாலிசர் டயர்களும் டோமினார்400 ல் சாதரன எம்ஆர்எஃப் சி1 டயர்களும் இடம்பெற்றுள்ளது.

  மற்ற காரணிகள்

  விலை குறைபிற்கு டோமினார் 400 பைக்கில் சாதரன மெட்டல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் டியூக்390ல் உயர்ரக இலகு எடை மற்றும் வலுமிக்க அலுமினியம்பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதன் எடை 139 கிலோ மட்டுமே அனால் டோமினார் எடை 182 கிலோ ஆகும்.

  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ,  ஏபிஎஸ் இல்லாத மாடல் போன்றவற்றை கொண்டுள்ள மோமினாரில் டியூக்390ல்  டபுள் சேனல் ஏபிஎஸ் , சிலிப்பர் கிளட்ச் போன்றவறை பெற்றுள்ளது.

  இரு மாடல்களுக்கு ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்…

  கேடிஎம் டியூக் 390 பைக் ஒரு ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் கொண்ட உலகதரமான மாடல் ஆகும்.

  பஜாஜ் டோமினார் 400 பைக் இந்தியர்கள் விரும்பும் மலிவு விலை மற்றும் சிறப்பு தன்மைகளுடன் கொண்ட பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்போர்ட்டிவ் க்ரூஸர் ஆகும்.

   

  மேலும் படிக்க – பஜாஜ் டோமினார் 400 முழுவிபரம்

  Rayadurai.M edited answer
  ×

  Login

  Question stats

  • Active
  • Views103 times
  • Answers1 answer
  • Followers1 follower