சென்னை அருகே தென்கொரியா நாட்டின் கியா மோட்டார்ஸ் ஆலை அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கியா கார்கள் இந்தியாவின் தொடக்கநிலை சந்தையிலே கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு 400 ஏக்கர் நிலம் கியா நிறுவனத்துக்கு வழங்க முன்வந்துள்ள நிலையில் குஜராத் மற்றும் ஆந்திராபிரதேசம் மாநிலங்களும் ஆலையை தங்களுடைய மாநிலங்களில் அமைப்பதற்கு ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் வருகின்ற செப்டம்பர் மாத இறுதியில் அதிகார்வப்பூர்வமாக கியா தொழிற்சாலை எங்கே என அறிவிக்கப்படலாம்.

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி கார்களுக்கு தொடக்கநிலை சந்தையில் மிக சிறப்பான போட்டியாளராக விளங்கும் வகையில் தன்னுடைய மாடல்களை வெளிப்படுத்தவும் , கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 , இயான் போன்ற மாடல்களின் விற்பனை பாதிக்காத வகையில் கியா கார்கள் வரலாம். ஹூண்டாய் வளர்ந்து வரும் பிரிமியம் ரக மாடல்களில் கவனம் செலுத்தும் நோக்கில் திட்டமிட்டுள்ளதால் கியா கார்கள் தொடக்கநிலை சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

Kia-Picanto

ஹைத்திராபாத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வாயிலாக கியா கார்களுக்கான தயாரிப்பு பணிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் 2019 ஆம் ஆண்டு முதல் கியா இந்தியாவில் வருடத்திறக்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்ய இலக்கினை வகுத்துள்ளது.

கியா கார்கள்

சர்வதேச அளவில் கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் மாடலாகளான கியா பிகான்டோ , கியா ரியோ , கியா ரியோ செடான் போன்ற தொடக்கநிலை கார்களை இந்திய சந்தையில் முதற்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் எஸ்யூவி ரகத்தில் கியா சோல் மற்றும் கியா ஸ்போர்டேஜ் கார்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

kia-rio

மிக வேகமாக வளர்ந்த வரும் எஸ்யூவி பிரிவில் கியா தொடக்கநிலை மாடல்களை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

ஹூண்டாய் & கியா மோட்டார்ஸ் இணைந்து சர்வதேச அளவில் 5வது இடத்தில் உள்ளது. தென்கொரியா நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் முதலிடத்திலும் கியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.