ஹீரோவின் புத்தம் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் உள்ள சிறப்பு வசதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஹீரோ நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு டிசைன் மற்றும் இஞ்ஜின் பெற்ற முதல் மோட்டார்சைக்கிள் ஆகும்.

splendor-ismart-110-bike

ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் போன்ற இரு ஸ்கூட்டர்களை சொந்த தயாரிப்பில் வெளியிட்டதை தொடர்ந்து மோட்டார்சைக்கிளிலும் ஹீரோ மோட்டோகார்ப் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 சிறப்புகளை கானலாம்.

1. டார்க் ஆன் டிமான்ட் இஞ்ஜின்

ஹீரோவின் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் இடம்பெற்றுள்ள  9.4 PS @7500 rpm ஆற்றல் மற்றும் 9Nm @ 5500 rpm டார்க் வழங்கும் 109.15cc ஏர் கூல்டு 4 ஸ்டோர்க் டார்க் ஆன் டிமான்ட் (TOD -Torque on Demand ) பிஎஸ்-4 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

splendor-ismart-110-engine

ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக் 0 முதல் 60 கிமீ வேகம் எட்டுவதற்கு 7.45 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஐஸ்மார்ட் 110 பைக் வேகம் மணிக்கு 87 கிமீ ஆகும். போட்டியாளர்களின் இஞ்ஜின் ஆற்றலை கூடுதலாக பெற்று 110சிசி பிரிவில் தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றது. முதன்முறையாக 110சிசி பிரிவில் பிஎஸ்4 மாசு உமிழ்வினை பெற்றுள்ளது.

2. i3S (ஐ3எஸ்)

ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 100சிசி பைக்கினை தொடர்ந்து இரண்டாவது மாடலாக ஐஸ்மார்ட் 110சிசி பிரிவில் இடம்பெற்றுள்ள i3S (Idle Stop and Start System ) நுட்பத்தினை பயன்படுத்தி சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல்கள் அல்லது வேறு எங்கேனும் 10 விநாடிகளுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தானாக இஞ்ஜின் அனைந்து விடும். கிளட்ச் மேல் கைப்பட்டாலே தானாகவே இஞ்ஜின் செயல்பட துவங்கிவிடும். மேலும் ஐ3எஸ் சுவிட்சபிள் அம்சத்தை பெற்றுள்ளது. நமக்கு தேவையான சமயங்களில் ஆன் அல்லது ஆஃப் செய்துகொள்ளலாம்.

splendor-ismart-110-i3s

3.  ஆட்டோ ஹெட்லேம்ப் ஆன்

இருசக்கர வாகனங்களில் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றான ஆட்டோ ஹெட்லேம்ப் வசதி விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களில் மட்டுமே கானப்படுகின்றது. முதன்முறையாக ஹீரோ நிறுவனம் கம்யூட்டர் பிரிவில் இணைத்துள்ளது. வெளிச்சம் குறைவான இடங்களிலும் , நேரங்களிலும் தானியங்கி முறையில் முகப்பு விளக்குகள் எரிய தொடங்கும் என்பதனால் சிறப்பாக வாகனத்தை இயக்க வசதியாக அமையும்.

splendor-ismart-110-aho

4. சிறப்பான இருக்கை

மிக அகலமான இருக்கையை பெற்று சிறப்பான கம்ஃபோர்ட் தன்மையை கொண்டுள்ள இருக்கைகளால் அதிக தொலைவு பயணிக்கும் பொழுது சிரமமில்லாமல் பயணிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

splendor-ismart-110

5. அனைத்தும் புதுசு

புதிய டிசைன் , புதிய அடிச்சட்ட பிரேம் , சிறப்பான புகைப்போக்கி சப்தம் தரும் வகையிலான மஃப்லர் ,  டிஜிட்டல்/அனலாக் எல்சிடி டிஸ்பிளே இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ,  , கிளஸ்ட்டரில் ஓடோமீட்டர் , டிரீப்மீட்டர் , சர்வீஸ் நினைவுபடுத்துதல் , பக்கவாட்டு ஸ்டேன்டு இன்டிகேட்டர் போன்ற பல அம்சங்களை பெற்று நவீனத்துவமான வடிவ மொழியில் அழகான ஸ்போர்ட்ஸ்ரெட் ,நீலம் மற்றும் கருப்பு , சிவப்பு மற்றும் கருப்பு மற்றும் சில்வர் பிளாக் என 4 வண்ணங்களில் கிடைக்கும்.

splendor-ismart-110-cluster

6. போட்டியாளர்கள்

டிவிஎஸ் விக்டர் 110 ,ஹோண்டா லிவோ மற்றும் யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக அமைந்துள்ள ஐஸ்மார்ட் பை

ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 விலை

ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 விலை ரூ. 53,700 ( சென்னை எக்ஸ்ஷோரும் )

மற்ற நகரங்களின் விலை விபரம்

ரூ.53,300 (Ex-showroom Delhi), ரூ. 53,100 (Ex-showroom Mumbai), ரூ. 53,800 (Ex-showroom Bangalore), ,ரூ.54,200 (Ex-showroom Kolkata), ரூ. 53,100 (Ex-showroom Pune), ரூ. 54,100 (Ex-showroom Hyderabad). 

hero-splendor-ismart-110-features