ஃபெராரி சூப்பர் கார்கள் விற்பனைக்கு வந்தது

இத்தாலியின் ஃபெராரி சூப்பர் கார்கள் அதிகார்வப்பூர்வமாக இந்திய சந்தையில் விற்பனையை தொடங்கியுள்ளது. டெல்லி மற்றும் முபையில் ஃபெராரி விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

ஃபெராரி 488 GTB
ஃபெராரி 488 GTB 

நேற்று விற்பனையை தொடங்கிய ஃபெராரி கலிஃபோர்னியா T மாடலை காட்சிப்படுத்தியது. ஃபெராரி கலிஃபோர்னியா T மாடல் விலை ரூ.3.45 கோடியாகும்.

ரூ.3.45 கோடி முதல் தொடங்கி ரூ.4.87 கோடி விலை வரை மொத்தம் 6 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி மாநகரில் செலக்ட் கார்ஸ் டீலராகவும் மும்பையில் நவநீத் மோட்டார்ஸ் டீலராகவும் நியமிக்கப்பட்டுள்ளது.

மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த சூப்பர்கார்கள் இந்திய சந்தைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஃபெராரி கார்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கப்படிருந்த நிலையில் 2015ம் ஆண்டிற்க்கான முன்பதிவு முடிந்து விட்டதாக தெரிகின்றது.

ads

ஃபெராரி கார்களின் விலை பட்டியல் (ex-showroom Delhi)

ஃபெராரி கலிஃபோர்னியா T ; ரூ.3.45 கோடி

ஃபெராரி 488 GTB ;  3.99 கோடி

ஃபெராரி 458 ஸ்பைடர் ;  4.22 கோடி

ஃபெராரி 458 ஸ்பெஷலே ; ரூ.4.40 கோடி

ஃபெராரி FF ;  ரூ.4.72 கோடி

ஃபெராரி F12 பெர்லின்டா ; ரூ.4.87 கோடி

Ferrai re-launched in indian market

Comments