அஸ்ஸாம் : சிறிய கார்களுக்கான தடை நீக்கம்

கிராஷ் டெஸ்ட் சோதனையில் தோல்வியடைந்த சிறிய ரக கார்களின் மீதான அசாம் மாநில உயர்நீதி மன்றத்தின் தடை நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்க்கும் மற்ற ஐரோப்பியா நாடுகளுக்கும் பாதுகாப்பில் வித்தியாசம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி
மாருதி சுசூகி ஸ்விஃபட் பூஜ்ய மதிப்பெண்

குளோபல் ஏன்சிஏபி அல்லது யூனைடேட் நாடுகளின் பாதுகாப்பு விதிகள் என்பது இந்தியாவிற்க்கு ஆன விதிகள் அல்ல அங்குள்ள நடைமுறைகள் மற்றும் வாகனத்தின் தரம் வேறு என சியாம் (SIAM) தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தெரிவித்துள்ளது.

மாருதி , ஹூண்டாய் , நிசான் , டாடா , ஜிஎம் என மொத்தம் 16 தயாரிப்பாளர்களின் 140க்கு மேற்பட்ட கார்களுக்கான தடை தற்பொழுது நீங்கியுள்ளதால் அசாம் மாநிலத்தில் இனி வழக்கம் போல விற்பனை தொடங்கும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு ஆராய் (ARAI) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்வதற்கான அங்கீகாரம் உள்ளதால் தனி ஒரு மாநிலத்தில் தடை செய்ய முடியாது என்பதனால் சிறிய கார்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

ads

பாதுகாப்பு தர சோதனைக்கான BNVSAP அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. அந்த கால இடைவெளிக்குள் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பு தர சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என சியாம் தெரிவித்துள்ளது.

குளோபல் என்சிஏபி கடிதம்

இந்த தடை குறித்து சர்வதேச குளோபல் என்சிஏபி அமைப்பு சியாம் க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தியாவில் விற்பனையில் உள்ள கார்கள் மிகவும் பாதுகாப்பற்றதாக உள்ளது. எனவே வரும் 1 ஜனவரி 2016 முதல் பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இந்தியாவில் விற்பனையில் உள்ள பல கார்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள கார்களை விட 20 வருடம் பாதுகாப்பு தரத்தில் பின் தங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யப்போகின்றது இந்தியா ?

இந்திய கார்களுக்கு பாதுகாப்பு தர கிராஷ் டெஸ்ட் சோதனைகள் நடத்தும் மையம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதன் பெயர் BNVSAP ( Bharat New Vehicle Safety Assessment Programme ) ஆகும். இதன் பாதுகாப்பு சோதனைகள் 2017ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

யார் பொறுப்பு ?

பாதுகாப்பான கார்களை தேர்ந்தெடுப்பது நம் கடமைதான். விலை குறைவாக இருக்கின்றது என்ற காரணத்தால் தரமற்ற கார்களை வாங்கினால் நம் உயிருக்கு யார் பொறுப்பு ? சிந்தனை செய் மனமே…!

Comments