ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் விற்பனைக்கு வந்தது

ஆடி நிறுவனத்தின் புதிய ஆடி ஏ6 சொகுசு செடான் காரை சற்றுமுன் ரூ.49.50 லட்ச விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.  ஆடி A6 கார் இந்தியாவில் வாட்ஸ்ஆப் வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடி ஏ6

ஆடி ஏ6 செடான் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் சில புதிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

ஆடி ஏ6 தோற்றத்தில் புதிய எல்இடி மேட்ரிக்ஸ் முகப்பு விளக்குகள் , முன் மற்றும் பின் பம்பர் , பக்கவாட்டு ஸ்க்ர்ட்ஸ் ,டெயில் விளக்குகள் , டைனமிக் டர்ன் இன்டிக்கேட்டர் மற்றும் புகைப்போக்கி போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் உடன் இணைந்த குரல் வழி கட்டுப்பாடு , பின்புற இருக்கை பயணிகளுக்காக ரிமோட் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

ads

180எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TFSI என்ஜின் மற்றும்  174 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TDI என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆடி ஏ6 காரின் தொடக்க விலை 49.50 லட்சம் (Ex-showroom Delhi)
2015 Audi A6 facelift launched

Comments