ஆடி S5 ஸ்போர்ட்பேக் விற்பனைக்கு வந்தது

ஆடி S5 ஸ்போர்ட்பேக் பெர்ஃபாமென்ஸ் ரக செடான் காரை ரூ.62.95 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்போர்ட்பேக் மாடலாகும்.

ஆடி S5 ஸ்போர்ட்பேக்

முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள ஆடி S5 ஸ்போர்ட்பேக் காரில் மிக சக்திவாய்ந்த 333 ஹெச்பி ஆற்றலை வழங்கும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

333 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 3.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 400என்எம் ஆகும். ஆற்றல் 4வீல்களுக்கு செல்லும் வகையில் ஆல்வீல் டிரைவ் குவோட்ரோ அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 7 வேக எஸ் ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 5.1 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆடி S5 ஸ்போர்ட்பேக் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் கருப்பு நிற கேபினை பெற்றுள்ள ஆடி S5 ஸ்போர்ட்பேக் காரில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் , பெடல் ஷிஃப்டர் , ஸ்போர்ட்டிவ் இருக்கைகளை பெற்றுள்ளது. மேலும் ஆடி டிரைவ் செலக்ட் மூலம் கம்ஃபோர்ட் , ஆட்டோ , டைனமிக் , எஃபிஷன்சி மற்றும் இன்டிஜூவல் என 5 விதமான மோடில் டிரைவ் செய்ய இயலும்.

audi-s5-sportback-launched
ads

8 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி , ஸ்போர்ட்ஸ் டிஃபரன்ஷியல் லாக்  போன்ற வசதிகளுடன் ரியர் பார்க்கிங் வீயூ கேமரா போன்றவற்றை ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் பெற்றுள்ளது.

ஆடி S5 ஸ்போர்ட்பேக் கார் விலை ரூ.62.95 லட்சம். (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

ஆடி S5 ஸ்போர்ட்பேக்

Audi S5 Sportback Launched

Comments