ஆப்பிள் தானியங்கி கார் தயாராகின்றதா ?

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே தானியங்கி கார் தயாரிப்பில் ஆர்வமாக உள்ளது. ஆப்பிள் தானியங்கி கார் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்ற நிலையில் கார் தயாரிப்பிற்கு என மிகவும் ரகசியமாக தனது திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆப்பிள் கார் மின்சாரத்தில் இயங்கும் காராகவும் தானியங்கி முறையில் செயல்படும் காராகவும் வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

ads

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அமெரிக்கா தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு (National Highway Traffic Safety Administration) பிரிவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு தலைவர் ஸ்டீவ் கென்னர் அனுப்பியுள்ள 5 பக்க கடிதத்தில் தானியங்கி கார் தயாரிப்பு சோதனைக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் என்னவென்றால் போர்ஷே நிறுவனத்தின் தொழிற்நுட்ப இயக்குநர் அலெக்சாண்டர் ஹிட்ஜிங்கரை தனது டெக்கனிக்கல் இயக்குநராக நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லீ மென்ஸ் ரேஸ் பந்தயங்களில் அனுபவமிக்க ஹிட்ஜிங்கர் போர்ஷே நிறுவனத்தின் 919 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ்கார் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்படதக்கதாகும்.

கடந்த மார்ச் 2016யிலே அலெக்சாண்டர் போர்ஷே நிறுவனத்தை விட்டு விலகிவிட்டதாகவும் தற்பொழுது சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றுவதாக மட்டுமே அவரது லிங்க்டூஇன் பக்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எனவே ஆப்பிள் தானியங்கி கார் தயாரிப்பில் ஹிட்ஜிங்கர் பணியாற்றலாம் என கூறப்படுகின்றது.

ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்குவது உறுதி செய்ப்பட்டுள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் தங்களுடைய தானியங்கி கார் நிறுவனத்துக்கு கூகுள் வேமோ என பெயரிட்டுள்ளது.

Comments