இந்தியாவில் யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகள் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த சூப்பர் பைக்குகள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகள் இணைந்துள்ளது.

யமஹா ஆர்1

யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகளில் 197பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த 998சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 112என்எம் ஆகும்.

யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகளில் இரட்டை எல்இடி முகப்பு விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளுமே நேர்த்தியான ஸ்போர்டிவ் தோற்றத்தினை கொண்டவை.

யமஹா ஆர்1 பைக்கினை சாதரண சாலைகளிலும் இயக்க முடியும். பல நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட பைக்காக விளங்குகின்றது. ஆர்1எம் பைக் பந்தய டிராக்குகளில் மட்டுமே இயக்க முடியும். இந்த பைக்கில் ஒரு லேப்பினை கடக்க எடுத்து கொண்ட நேரம் , வளைவில் திரும்பும்பொழுது பைக் சாய்வதை எச்சரிக்கும் அமைப்பு ,  டிராக்சன் கட்டுப்பாடு , ஸ்லைட் கட்டுப்பாடு என பல வசதிகளை கொண்டுள்ளது.

ads

ஆர்1 பைக் ரேசிங் சிகப்பு , மற்றும் ரேசிங் நீலம் என இரண்டு வண்ணங்களிலும் ஆர்1எம் பைக் சில்வர் புளூ கார்பன் வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

யமஹா  ஆர்1எம்

யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகள் விலை விபரம் (ex-showroom, Delhi)

யமஹா YZF-R1 விலை ரூ.22.34 லட்சம்

யமஹா YZF-R1M விலை ரூ..29.43 லட்சம்

Yamaha Launches the R1 Priced at Rs. 22.34 lakhs and R1M Priced at Rs. 29.43 Lakhs

Comments