இபிஆர் நிறுவனத்தை வாங்கும் ஹீரோ மோட்டோகார்ப்

எரிக் புயல் ரேசிங் நிறுவனத்தின் அனைத்து சொத்துகளையும் உலகின் முன்னனி இரு சக்கர தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் 2.8 மில்லியன் டாலருக்கு வாங்குகின்றது.

ஹீரோ ஹேஸ்டர்
ஹீரோ ஹேஸ்டர்
ஹோண்டா பிரிந்த பின்னர் அமெரிக்காவின் எரிக் புயல் ரேசிங் நிறுவனத்தின் 49.2 சதவீத பங்குகளை கடந்த 2013ம் ஆண்டில் வாங்கியது. இபிஆர் நிறுவனம் திவாலானதால் ஏலத்திற்க்கு வந்தது.
இபிஆர் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ரூ.18 கோடியில் வரும் ஆகஸ்ட் 10ந் தேதிக்குள் வாங்க உள்ளது. இதன் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை மிக சிறப்பாக வளரும்.
தற்பொழுது தயாரிப்பு நிலையில் உள்ள HX250R மற்றும் ஹேஸ்டர் போன்ற பைக்குகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது . இதன் மூலம் இந்த பைக்குகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
Hero Motocorp to acquire certain assets of Erik Buell Racing 

Comments