எட்டியோஸ் லிவா இரு வண்ண கலவை அறிமுகம்

டொயோட்டா எட்டியோஸ் லிவா காரில் இரு வண்ண கலவை மாடலை ரூபாய் 6.03 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வண்ண கலவை , சில கூடுதலான வசதிகளை மட்டுமே பெற்று எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.

 எட்டியோஸ் லிவா

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 78.8 bhp பவர் 104 Nm டார்க் வெளிப்படுத்தும்.  1.4 டீசல் எஞ்சின் 67.04 bhp பவர் ,  170 Nm டார்க் வெளிப்படுமத்தும். இரு எஞ்சின்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ads

மூன்று டூயல் கலர்களில் வந்துள்ள லிவா காரில் V மற்றும் VX  பெட்ரோல் , VD மற்றும் VXD டீசல் என மொத்தம்4 விதமான வகைகளில் கிடைக்க உள்ளது. நீலம் , சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் மட்டுமே மேற்கூறை கருப்பு வண்ணத்தில் கிடைக்கும்.

புதிய வசதிகள் விபரம்

  • கருப்பு வண்ணம் கொண்ட கிரில்
  • பனி விளக்கு அறையில் க்ரோம் பூச்சூ
  • எலக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர்
  • ஸ்போர்ட்டிவ் ரூஃப் ஸ்பாய்லர்
  • பியானோ கருப்பு வண்ண கிளஸ்ட்டர்
  • புதிய ஆப்டிரான் காம்பிமீட்டர்
  • கழட்டி வைக்கும் வகையிலான பின்புற ஹெட்ரெஸ்ட்

பாதுகாப்பு அம்சங்கள்

எட்டியோஸ் லிவா காரில் உள்ள முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்…

  • ஏபிஎஸ் , இபிடி ,  மற்றும் முன்பக்க இரு காற்றுப்பைகள் (ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர்)
  • ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு லாக் இருக்கைகள்
  • அனைத்து இருக்கையிலும்  3 point ELR (Emergency Locking Retractor)

எட்டியோஸ் விலை விபரம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)

 லிவா பெட்ரோல் விலை ரூபாய் 5,94,535 முதல் ரூபாய் 6,44,861 வரை

 லிவா  டீசல் விலை ரூபாய்  7,24,321 முதல் ரூபாய் 7,61,403 வரை

Comments