ஏன் இந்த ஏமாற்று வேலை – மைலேஜ் தகவல்

நிறுவனங்கள் தரும் மைலேஜ் ஏன் வரவில்லை ? அவை போலியான மைலேஜ் ? அல்லது ஏமாற்று வேலையா ? – மைலேஜ் தகவல் உண்மை என்ன தெரிந்து கொள்ளலாம்.

வாகனங்களின் மைலேஜ் என்பது வாடிக்கையாளர்கள் வாகனத்தை தேர்வு செய்வதற்க்கு மிக முக்கிய காரணியாக உள்ளது. அதிக மைலேஜ் தருவதாக சொல்லப்படும் பைக்குகளும் கார்களும் உண்மையில் மைலேஜ் என்ன தருகின்றது.

வாசகரின் கேள்வி இதோ

ARAI மைலேஜ்

ads

எந்தவொரு வாகனம் புதிதாக விற்பனைக்கு வந்தாலும் ஆராய் (Automotive Research Association of India -ARAI  )அமைப்பினால் அங்கிகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்ய இயலும். ஆராய் அமைப்புதான் வாகனங்களுக்கான மைலேஜ் விபரங்களை சோதனை செய்து அறிவிக்கின்றது.

நிறுவனங்களின் மைலேஜ்

ஐடில் நிலையில் அதாவது வாகனங்கள் எந்தவிதமான இயக்கமும் இல்லாமல் உண்மையான சாலையில் சோதனைகள் செய்யப்படாமல் சுற்றும் சாலைகளால் அதாவது டைனோமோமீட்டர் உதவியுடன் கார் மற்றும் பைக்குகள் இயங்குவதனை போல சாலைகளை சுற்றவிட்டு கார் மற்றும் பைக்குகளுக்கான மைலேஜ் சோதனை செய்யப்படுகின்றது.

அதாவது ஒரு காரினை எடுத்துகாட்டாக எடுத்துக்கொள்ளலாம்..

அந்த காரினை சுமார் 1140 விநாடிகள் அல்லது 10 நிமிடங்கள் அல்லது 10 கிமீ தூரம் வரை சுற்றும் சாலைகளால் இயக்கி மைலேஜ் சோதனை செய்யப்படுகின்றது.

நெடுஞ்சாலை மற்றும் நகரம் என இரண்டுக்கும் ஏற்ப இந்த ரோலிங் சாலைகளை மாற்றி சோதனை செய்ப்படுகின்றது. சோதனையின்பொழுது காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ மற்றும் குறைந்த வேகம் மணிக்கு 10கிமீ ஆகவும் சராசரியாக மணிக்கு 31.6கிமீ வேகத்தில் வாகனம் இயக்கப்படும். காற்று உராய்வினால் ஏற்படும் இழப்பு  வெறும் மணிக்கு 18 கிமீ ஆக எடுத்தக்கொள்ளப்படும். மேலும் வெளிப்புற வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாக எடுத்துக்கொள்ளுவார்கள். இவைகளை அடிப்படையாக கொண்டே சராசரி மைலேஜ் தீர்மாணிக்கப்படும்

சேஸீஸ் டைனோமோமீட்டர்  உதவியுடன் போலியான உருளும் சாலைகளில்தான் வாகனங்கள் இயங்குமோ தவிர நிஜமான சாலைகளில் இயங்காது..

உண்மையான சாலை

உண்மையான சாலைகளில் இயக்கும்பொழுது வாகனத்தினை இயக்குபவரின் வேகம் , இயக்கும் விதம், வாகனத்தின் எடை , சாலையின் தன்மை , எதிர் காற்றின் வேகம் என நிஜங்களுக்கு மத்தியில் போலிகள் மறைந்துவிடுவதனால் உண்மையான மைலேஜ் வெளிவருகின்றது.

சிலருக்கு மைலேஜ் சிறப்பாக வர காரணம் அவர்களின் ஓட்டும் திறன் மற்றும் வேகமே காரணம்

உண்மையான மைலேஜ் ஆராய் மைலேஜை விட 30 முதல் 35 சதவீதம் வரை குறைவாகத்தான் இருக்கும். சில பைக் மற்றும் கார்களில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

உங்கள் கார் மற்றும் பைக்கின் உண்மையான மைலேஜ் பகிர்ந்துகொள்ளுங்கள்..

கமெண்ட் .. அவற்றை தொகுத்து ஒரு செய்தியாக வெளியிடலாம் அது பலருக்கு உதவும்…..

பிடிச்சிருந்தா உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்….

Comments