ஐஷர் ப்ரோ 5000 சீரிஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்

ஐஷர் வால்வோ கூட்டணியில் செயல்படும் ஜஷர் பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறுவனம் புதிதாக பாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சினை பெற்ற ஐஷர் ப்ரோ 5000 சீரிஸ் டிரக்குளை 16 டன் முதல் 49 டன் வரையிலான பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஷர் ப்ரோ 5000 சீரிஸ் டிரக்

  • பி.எஸ் 4 தர எஞ்சினை பெற்ற மாடல்களாக புதிய டிரக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • வால்வோ நிறுவனத்தின் EMS3.0 நுட்பத்தை அடிப்படையாக i3 EGR நுட்பம் பெற்றுள்ளது.
  • ப்ரோ 5000 வரிசை டிரக்குகள் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை கொண்டதாகும்.

ஐஷர் நிறுவனத்தின் பாரத் ஸ்டேஜ் 4 தர  E694 எஞ்சினை பெற்றுள்ள புதிய ப்ரோ 5000 வரிசை டிரக்குகள்  i3 EGR நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.  i3 EGR நுட்பமானது வால்வோ நிறுவனத்தின்  EMS3.0 (Engine Management system EMS 3.0) நுட்பத்தினை அடிப்படையாக கொண்டதாகும்.

ads

மிக சிறப்பான கையாளுமை , பவர் டார்க் உள்பட அதிகபட்ச மைலேஜ் மற்றும் குறைந்த செலவில் பாரமரிக்கும் அம்சங்களை பெற்று விளங்குகின்ற இந்த டிரக்குகளில் இடம்பெற்றுள்ள வால்வோ நிறுவனத்தின்  EMS3.0 எனப்படும் உயர்த நுட்பத்தின் வாயிலாக ஃப்யூல் கோச்சிங் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

விஇ கமர்ஷியர் தலைவர் வினோத் அகர்வால் அறிமுகத்தின் பொழுது கூறியதாவது..

புதிதாக இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐஷர் ப்ரோ 5000 சீரிஸ் மிக சிறப்பான விலை அம்சத்துடன் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையிலும், i3 EGR நுட்பத்தை அடிப்பையாக கொண்ட பி.எஸ்4 என்ஜின் பெற்றிருக்கும் இந்த டிரக்குகள் வாடிக்கையார்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

Comments