கவாஸாகி Z250SL பைக் இந்தியா வருகை

கவாஸாகி இசட்250எஸ்எல் பைக் இன்னும் சில மாதங்களில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வருகின்றது. கவாஸாகி Z250SL பைக்கின் விலை ரூ. 2லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

கவாஸாகி Z250SL பைக்
கவாஸாகி Z250SL பைக்

தொடக்க நிலை பெர்ஃபாமென்ஸ் ரக கவாஸாகி Z250SL பைக்கின் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்ய இருப்பதனால் மிகுந்த சவாலான விலையில் விற்பனைக்கு வரலாம்.

கவாஸாகி நின்ஜா 300 மற்றும் கவாஸாகி Z250 போன்ற தொடக்க நிலை பைக் வரிசையில் புதிதாக கவாஸாகி Z250SL பைக்கும் இணைகின்றது. ஏபிஎஸ் பிரேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக் இல்லாத மாடல் என இரண்டிலும் வரவுள்ளது.

கவாஸாகி Z250 மாடலை விட 20கிலோ குறைவான எடையில் இருக்கும் Z250SL பைக் எடை 150 கிலோ ஏபிஎஸ் மாடல் இருக்கும். ஏபிஎஸ் இல்லா மாடல் 2 கிலோ எடை குறைவாக இருக்கும்.

ads

இசட்250எஸ்எல் பைக்கில் 31.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 249சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பைக்கின் விலை கவாஸாகி பைக்கின் தொடக்க நிலை விலை கொண்ட மாடலாக இருக்கும்.

கவாஸாகி Z250SL பைக்கின் போட்டியாளர்கள் ஹோண்டா சிபிஆர்250ஆர் மற்றும் கேடிஎம் டியூக் 200 ஆகும்.

Kawasaki Z250SL India launch this year end

Comments