க்ரெட்டா எஸ்யூவி காத்திருப்பு காலம்10 மாதமா ?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த க்ரெட்டா எஸ்யுவி காலத்திற்க்கு 6 மாதம் முதல் 10 மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. க்ரெட்டா எஸ்யூவி காம்பேக்ட் ரக பிரிவில் தானியங்கி கியர்பாக்சுடன் விற்பனைக்கு வந்த மாடலாகும்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

டஸ்ட்டர் , டெரானோ , ஈக்கோஸ்போர்ட் போன்ற எஸ்யூவிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள க்ரெட்டா எஸ்யுவி 2 டீசல் என்ஜின் மற்றும் ஒரு பெட்ரோல் என்ஜினிலும் கிடைக்கின்றது.

கடந்த ஜூலை 21ந் தேதி விற்பனைக்கு வந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி 6 விதமான வேரியண்டில் மூன்று விதமான என்ஜின்களுடன் ஆள்யிக்க மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் என இரண்டிலும் வந்துள்ளது.

மேலும் வாசிக்க ; ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி முழுவிபரம்

ads

காம்பேக்ட் ரக எஸ்யுவி கார்களில் டீசல் தானியங்கி கியர்பாக்சிற்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளதை நிருபீக்கும் வகையில் 6 முதல் 10 மாதம் வரை மற்ற மாடல்களுக்கு 4 முதல் 6 மாதங்கள் வரை பொறுத்திருக்க வேண்டுமாம்.

Waiting period for Hyundai Creta automatic variant up to 10 months

Comments