சுசுகி மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு – ஜிஎஸ்டி எதிரொலி

ஜிஎஸ்டி எதிரொலியின் காரணமாக மோட்டார் சைக்கிள்கள் விலை குறைந்து வரும் நிலையில் சுசுகி பைக்குகள் ரூ.500 முதல் ரூ.2000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. பிரிமியம் ரக மாடல்களான GSX-S1000 ABS, GSX-S1000F, GSX-R1000R மற்றும் ஹையபுசா போன்றவை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சுசுகி பைக்குகள் – ஜிஎஸ்டி

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற ஸ்கூட்டர்கள் மற்றும் 350சிசி க்கு குறைவான பைக் மாடல்கள் போன்றவற்றின் விலை ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ads

பிரிமியம் ரக சூப்பர் பைக் மாடல்களில் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்ற GSX-S1000 ABS, GSX-S1000F, GSX-R1000R மற்றும் ஹையபுசா போன்றவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  350சிசி க்கு மேற்பட்ட பிரிவுகளில் உள்ள மாடல்களுக்கு 31 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சுசுகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜிக்ஸர் வரிசை மாடல்களின் விலை அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு டீலர்கள் மற்றும் மாநிலம் வாரியாக மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

350சிசி க்கு குறைவான பெரும்பாலான நிறுவனங்களில் உள்ள பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலை 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ. 4200 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார் நிறுவனங்கள் ரூ. 2000 முதல் 3 லட்சம் வரை விலை குறைத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடதக்கதாகும்.

Comments