சென்னையில் பிஎம்டபிள்யூ என்ஜின் தயாரிப்பு

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சென்னை அருகே உள்ள சிங்கபெருமாள்கோவில் தொழிற்சாலையில் பிஎம்டபிள்யூ என்ஜின்கள் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 எஸ்யுவி
பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 எஸ்யுவி

ஃபோர்ஸ் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பிஎம்டபிள்யூ கார்களின் என்ஜினை ஒருங்கினைக்க உள்ளனர். ஆண்டிற்க்கு 20,000 என்ஜின்கள் தயாரிக்க முடியும் .முழுமையாக இந்த தொழிற்சாலை செயல்பாட்டிற்க்கு வரும் பொழுது ஆண்டிற்க்கு 50,000 என்ஜின்கள் தயாரிக்க முடியும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் , 3 ஜிடி , 5 சீரிஸ் , 7 சீரிஸ் , X1 , X3 மற்றும் X5 எஸ்யுவி கார்களுக்கு இந்த ஆலையில் தயாரிக்க உள்ளனர். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் அவுட்சோர்சிங் முறையில் ஃபோர்ஸ் மோட்டர்ஸ் செயல்படும்.

ரூ.200 கோடி முதலீட்டில் மஹிந்திரா  வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மேற்பார்வையில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்த தொழிற்சாலையை கட்டியுள்ளது.

ads

Force Motors Inaugurates New BMW Engine assembly Plant in Chennai

Comments