செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி விரைவில்

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. செவர்லே ட்ரெயில்பிளேசர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் மட்டுமே வருகின்றது.

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி
செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி

முழுதும் வடிவமைக்கப்பட்டு மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் மட்டுமே வரவுள்ளது. விற்பனை அதிகரிக்கும்பொழுது இந்தியாவிலே உற்பத்தியை தொடங்க செவர்லே திட்டமிட்டுள்ளது.

பிரிமியம் ரக எஸ்யூவி கார்களில் முன்னிலை வகிக்கும் ஃபார்ச்சூனர் எஸ்யூவி காருக்கு சரி நிகரான சவலாக வரவுள்ள ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி கார் பஜெரோ ஸ்போர்ட் , ஃபோர்டு என்டெவர் , சான்டா ஃபீ ,  ரெக்ஸ்டான் மற்றும் சிஆர்-வி போன்ற கார்களுக்கும் சவாலாக விளங்கும்.

செவர்லே ட்ரெயில்பிளேசர்
செவர்லே ட்ரெயில்பிளேசர்
ads

ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரில் 197பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.  இதன் முறுக்குவிசை 500என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மிரட்டலான ட்ரெயில்பிளேசர் காரில் மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் தாமதமாக வரலாம். தாரளமான இடவசதியுடன் 7 நபர்கள் அமர்ந்து பயணிக்க கூடிய எஸ்யூவி ஆகும்.

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ.31லட்சத்தில் இருக்கலாம்.

Chevrolet Trailblazer to come october 2015

Comments