செவர்லே ட்ரையல்பிளேசர் அமேசான் இணையத்தில்

செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி கார் அமேசான் தளத்தின் வழியாக ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது.

செவர்லே ட்ரையல்பிளைசர்
செவர்லே ட்ரையல்பிளைசர்
வரும் அக்டோபர் 21ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி காருக்கு அமேசான் இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
200 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 500என்எம் ஆகும். இதில் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
முதற்கட்டமாக முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் செவர்லே ட்ரையல்பிளேசர் வரும் காலத்தில் இந்தியாவிலே ஒருங்கினைக்கப்படும் பொழுது மெனுவல் ஆப்ஷனிலும் கூடுதலான வேரியண்டிலும் வரவுள்ளது.
செவர்லே நிறுவனத்தின் முதல் மாடலாக ட்ரையல்பிளேசர்  எஸ்யூவி ஆன்லைன் வழியாக  விற்பனையை தொடங்குகின்றது. வரும் அக்டோபர் 21ந் தேதி முதல் ஆன்லைன் மற்றும் டீலர்கள் வழியாக முன்பதிவு தொடங்குகின்றது.
ட்ரையல்பிளேசர் போட்டியாளர்கள் ஃபார்ச்சூனர் , சான்டா ஃபீ , பஜெரோ ஸ்போர்ட் , ரெக்ஸ்டான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்கும்.செவர்லே ட்ரையல்பிளேசர் விலை ரூ.31 லட்சம் இருக்கும்
இணைய முகவரி ; http://www.amazon.in/chevrolettrailblazer
Chevrolet Trailblazer to go on sale amazon

Comments