ஜாகுவார் F பேஸ் கிராஸ்ஓவர் அறிமுகம்

ஜாகுவார் F பேஸ் பெர்ஃபாமென்ஸ் ரக கிராஸ்ஓவர் எஸ்யூவி கார் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜாகுவார் எஃப் பேஸ் 2017ம் ஆண்டு முதல் சந்தைக்கு வரவுள்ளது.

ஜாகுவார் F பேஸ் கார்
ஜாகுவார் F பேஸ் எஸ்யூவி

மிக நேர்த்தியான எஸ்யூவி ரக கிராஸ்ஓவர் ஜாகுவார் F பேஸ் காரில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் அனைத்து விதமான சாலைகளிலும் பயணிக்க இயலும். எஃப் பேஸ் மொத்தம் 6 விதமான வேரியண்டில் கிடைக்கும்.

ஸ்டைலிசான கிராஸ்ஓவர் ரக ஜாகுவார் F பேஸ் காரில் புதிய இக்னியம் ரக என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

  • 177எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது FWD / AWD என இரண்டிலும் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கும்.
  • 237எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் RWD ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கும்.
  • 296எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 700என்எம் ஆகும். இதில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் (AWD) ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கும்.
  • 375எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில்ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் (AWD) ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கும்.
ads

ஜாகுவார் எஃப் பேஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக எலக்ட்ரானிக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 5.1 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

C-X17 கான்செப்டின் அடிப்படையில் உருவாகியுள்ள எஃப் பேஸ் காரின் நீளம் 4731மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2874மிமீ ஆகும். 5 இருக்கைகள் மட்டுமே கொண்டுள்ளதால் மிக சிறப்பான இடவசதியை பெற்றுள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் 650 லிட்டர் கொள்ளளவு கொண்டாதாகும்.

ஜாகுவார் F பேஸ் எஸ்யூவி

10.2 இஞ்ச் அகலம் கொண்ட (பேஸ் வேரியண்டில் 8 இஞ்ச் ) இன்கன்ட்ரோல் டச் புரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்தியுள்ளனர். இந்த அமைப்பானது மிக நவீனமான பல அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இதர்நெட் தொடர்பு , வை ஃபை ஹாட்ஸ்பாட் மூலம் 8 தொடர்புகளை ஏற்படுத்த முடியும். நேவிகேஷன் தொடர்புகளை முப்பரிமானத்தின் கான இயலும். 12.3 இஞ்ச் அகலம் கொண்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.

உட்புறத்தில் மிக சிறப்பான கட்டுமானத்தை பெற்றுள்ளது. F பேஸ் காரில் ஏக்டிவிட்டி கீ , வாட்டர்புரூஃப் , ஷாக்புரூஃப் விரிஷ்ட்பேன்ட் மற்றும் ட்ரான்ஸ்போனடர் போன்றவை முதன்முறையாக பெற்றுள்ளது.

ஜாகுவார் எஃப் பேஸ் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி காராக விளங்கும்.

ஜாகுவார் F பேஸ் கார் படங்கள்

2017 Jaguar F-Pace Revealed at Frankfurt Motor Show

Comments