ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது

ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு செடான் வரிசையில் புதிதாக ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் சிறப்பு பதிப்பு ரூ.52 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட்
ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் 

ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் சொகுசு கார் தோற்றத்தில் புதிய ஸ்போர்ட்டிவ் லுக் அமைப்புடன் கூடிய ரியர் ஸ்பாய்லரில் R-ஸ்டைல் பக்கவாட்டு சில்ஸ் , முகப்பு பம்பர் குரோம் பூச்சு கிரிலில் கருப்பு நிற சாயல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதல் விற்பனைக்கு வந்துள்ள ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் காரில் டீசல் மாடல் மட்டும் கிடைக்கும். இந்த காரில் 187.74எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 450என்எம் ஆகும். 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் மாடல் வெள்ளை , கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என நான்கு விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

ads

ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் கார் விலை

ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் விலை ரூ. 52 லட்சம் (ex-Showroom, Mumbai, pre-Octroi)

Jaguar XF Aero-Sport launched in India

Comments