ஜிஎம் தொழிற்சாலை மூடல் – குஜராத்

குஜராத்தில் இயங்கி வந்த ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே இந்திய உற்பத்தி பிரிவை மூடுவதற்க்கான முயற்சியை ஜிஎம் மேற்கொண்டுள்ளது. தாலேகான் தொழிற்சாலையின் உறபத்தி அதிகரிக்கப்பட்ட உடன் குஜராத் தொழிற்சாலை 2016ம் ஆண்டில் மூடப்பட உள்ளது.

ட்ரெயில்பிளேசர்

இந்தியாவில் ரூ.6400 கோடியை முதலீடு செய்ய உள்ள ஜிஎம் தனது குஜராத் ஆலையை மூடிவிட்டு மஹாராஷட்டிரா மாநிலத்தின் புனே அருகில் உள்ள தாலேகான் ஆலையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

குஜராத் தொழிற்சாலையில் உள்ள 1100 பணியாளர்களை தனது தாலேகான் ஆலைக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டு கொண்டுள்ளது. புனே ஆலையில் ஆண்டிற்க்கு 1.30 லட்சம் வாகனங்களை தயாரித்து வருகின்றது. முழு உற்பத்தியை எட்டும்பொழுது ஆண்டிற்க்கு 2.20 லட்சம் வாகனங்களை தயாரிக்க திறன் கொண்டதாகும்.

மேலும் வாசிக்க ; செவர்லே 10 கார்களை அறிமுகம்

ads

 குஜராத்தில் நுழைந்த முதல் ஆட்டோமொபைல் நிறுவனமான ஜிஎம் பலமுறை தொழிலாளர்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது.

Comments